சிக்க போகும் ஆர்.கே.சுரேஷ்! துபாயில் ஆருத்ரா, ஹிஜாவு மோசடியாளர்கள் தலைமறைவு! இன்டர்போலின் பிளான்
டெல்லி: பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் ஆருத்ரா உள்ளிட்ட நிதி நிறுவன மோசடிகளில் ஈடுபட்டவர்களை பிடிக்க இன்டர்போல் உதவியை தமிழக காவல் துறை நாடியுள்ளது.
ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ் ஆகிய நிதி நிறுவனங்களில் மக்களை ஏமாற்றி பல லட்சம் கோடி பணம் பறித்துச் சென்ற நிர்வாகிகள் துபாயில் பதுங்கியுள்ளதாக தமிழக காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மோசடி குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகிகளை கைது செய்ய தமிழக காவல் துறை இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. ஏற்கெனவே இரு முறை இன்டர்போல் அதிகாரிகளிடம் துபாய் போலீஸாரிடம் உதவி கேட்டனர்.
இதையடுத்து அந்த நிர்வாகிகளை விரைந்து கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுக்கிறது. இந்த வழக்குகளின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு இன்டர்போல் போலீஸார் சில வழிகாட்டுதல்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு வழங்கியுள்ளார்கள். அதனடிப்படையில் ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த ஆவணங்களை துபாய் அரசிடம் கொடுத்து இன்டர்போல் போலீஸாருடன் சென்று மோசடி குற்றம்சாட்டப்பட்டவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்யும் நடவடிக்கையில் உள்ளனர். ஆருத்ரா மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக நிர்வாகியும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ், ஹிஜாவு மோசடியில் சிக்கிய ராஜசேகர், மகாலட்சுமி, அலெக்சாண்டர், லட்சுமி நாராயணன், வேத நாராயணன், ஜனார்த்தனன் உள்ளிட்டோர் 3 முக்கிய வழக்குகளில் தலைமறைவாக இருப்போரை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டிருந்தது. மேலும் இன்டர்போல் மூலம் துபாய் நாட்டு அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு முறை கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து அவர்களை பிடிக்க இன்டர்போல் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது.
ஏற்கெனவே இரு முறை கடிதங்களை எழுதியிருந்தாலும் அதில் முழுமையான விவரங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழங்கவில்லை என தெரிகிறது. இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மோசடி பணத்தில் எவ்வளவு சொத்துகளை கொள்ளையடித்து வாங்கியுள்ளார்கள், எத்தனை பேரை ஏமாத்தியுள்ளார்கள் போன்ற விவரங்களை இன்டர்போல் கேட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் எல்லாம் கிடைக்கப்பெற்றவுடன் வழக்கின் தீவிரத்தன்மையை துபாய் நாட்டு அரசிடம் கூறி குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய இன்டர்போல் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications