அதிமுகவிடம் 54 தொகுதிகளைக் கேட்க திட்டமிடும் பாஜக.. டெல்லியில் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டெல்லி: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார். அங்கு நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்திய நிலையில், நயினார் நாகேந்திரன் இன்று மாலை டெல்லியில் இருந்து கோவை திரும்புவதாக இருந்தது. ஆனால் திடீரென அமித்ஷா அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பால் தன் பயணத்தை நயினார் ரத்து செய்திருந்தார். அதிமுகவிடம் 54 தொகுதிகளைக் கேட்க பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அமித்ஷா - நயினார் நாகேந்திரன் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அரசியல் கட்சிகள் தங்களின் பரபர வியூகங்கள், பிரச்சாரத்துடன் களத்தில் சுறு சுறுப்பாக இயங்கி வருகிறார்கள். திமுக வடக்கு மண்டல இளைஞரணி கூட்டம் இன்று மாலை திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. இதில் சுமார் 1.30 லட்சம் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரன் டெல்லி விசிட்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை வேலூர் வருகிறார். பாஜக கட்சி நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அதிமுக செயற்குழு - பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்திருந்தது. ஈரோடு மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் வருகிற 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
தமழ்நாடு அரசியலில் எப்படியாவது கால் பதிக்க வேண்டும் என்று பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 2 நாட்கள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.
தொகுதி பட்டியல்
தமிழ்நாடு அரசியலின் தற்போதைய நிலை, திமுகவுக்கு எதிராக அமைக்க வேண்டிய வியூகங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தவப்பட்டு வருகிறது. முக்கியமாக 2026 தேர்தலில் பாஜக போட்டியிடுவதற்காக தேர்வு செய்துள்ள தொகுதிகளின் பட்டியலை பாஜக தலைவர்களிடம் நயினார் வழங்கியுள்ளார். அதில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் அடங்கிய விருப்பப் பட்டியல் உள்ளது.
ஏற்கனவே டெல்லி செல்வதற்கு முன்பு நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பாக ஆரம்ப கட்ட ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் தான் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றுள்ளார்.
அமித்ஷா அப்பாய்ன்மென்ட்
நயினார் சார்பில் அமித்ஷாவை சந்திப்பதற்கும் நேரம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று மதியம் வரை அப்பாயின்மென்ட் கிடைக்காமல் இருந்தது. இதனால் நயினார் நாகேந்திரனும் கட்சி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கோவை திரும்ப விமான டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென நயினாருக்கு அமித்ஷா அலுவலகத்தில் இருந்து அழைப்பு சென்றது.
இதைத்தொடர்ந்து, அமித்ஷாவை நயினார் நாகேந்திரன் இரவில் சந்தித்துள்ளார். அமித்ஷா நாளை தமிழகம் விசிட்டின் போது பல முக்கிய விஷயங்களை பேசவுள்ளார். அதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும், பாஜக தொகுதி விருப்பப் பட்டியலும் அமித்ஷாவிடம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
முக்கிய சந்திப்பு
மேலும் நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அழைப்பும் விடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications