லோக்சபா தேர்தல் முடிந்த கையோடு.. நாடு முழுக்க உயரும் சுங்க கட்டணங்கள்.. நாளை நள்ளிரவு முதல் அமல்!
டெல்லி: நமது நாடு முழுக்க இருக்கும் சுங்கச்சாவடிகளில் நாளை (ஜூன் 3) நள்ளிரவு முதல் சுங்க கட்டணங்கள் உயர்த்தப்படுவதாகத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
நமது நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே விரைவாகப் பயணிக்கவும் சரக்குகளை ஈஸியாக எடுத்துச் செல்லவும் நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த நெடுஞ்சாலைகள் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாகவும் வேகமாகவும் செல்ல முடிகிறது.

இருப்பினும், இந்தச் சாலைகளில் பயணிக்க நாம் தனியாகச் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். வழக்கமாக இந்தச் சுங்கக் கட்டணங்கள் ஏப்ரல் மற்றும் செப். மாதங்களில் 1ஆம் தேதி உயர்த்தப்படும்.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி நாடு முழுக்க சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இருப்பினும், அப்போது கடைசி நேரத்தில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.. மத்திய சாலை போக்குவரத்துத் துறை அறிவுறுத்தலின் பெயரிலேயே புதிய கட்டணம் அமல்படுத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்தச் சூழலில் இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், நாளை (ஜூன் 3) நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.. நாடு முழுக்க ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.. நாடு முழுக்க அந்த சுங்கக் கட்டண உயர்வே நாளை நள்ளிரவு அமலுக்கு வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications