நாடு முழுக்க 50% வரை குறையும் சுங்க கட்டணம்... இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு.. ஆனா ஒரு ட்விஸ்ட்
டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை 50% வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் அல்லது உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைகள் போன்ற கட்டமைப்புகள் உள்ள பகுதிகளுக்கான சுங்கக் கட்டணம் கணக்கிடும் முறை மாற்றப்படுவதால் சுங்கக் கட்டணம் கணிசமாகக் குறையப் போகிறது.
நமது நாடு முழுக்க தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கச் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைகள் அமைக்கவும், அதைப் பராமரிக்கவும் ஆகும் செலவுகளைச் சரிக்கட்டவே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் சுங்கக் கட்டணம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பலரும் புலம்புவதை நாம் கேள்விப்பட்டு இருப்போம்.

மத்திய அரசு முடிவு
இந்தச் சூழலில் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் உள்ள பகுதிகளில் சுங்கக் கட்டணத்தை 50% வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நமக்கு வரும் காலங்களில் சுங்கக் கட்டணம் கணிசமான அளவுக்குக் குறையும். இது பொதுமக்களுக்குப் பெரியளவில் பலனைத் தருவதாகவே இருக்கும்.
தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணத்தைக் கணக்கிடப் புதிய பார்முலாவை உருவாக்கியுள்ளதாகச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் கூறியுள்ளது. புதிய பார்முலாவின்படி, ஒரு நெடுஞ்சாலையில் பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் அல்லது உயர்த்தப்பட்ட சாலைகள் இருந்தால் அதன் நீளத்தில் 10 மடங்கு அல்லது ஒட்டுமொத்தச் சாலையின் 5 மடங்கு நீளம் மட்டுமே சுங்க கட்டணத்திற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அதாவது நாம் நெடுஞ்சாலைகளில் செல்லும்போது ஒரு கிமீக்கு இத்தனை ரூபாய் என்றே சுங்கக் கட்டணம் கணக்கிடப்படும். நெடுஞ்சாலையில் பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் இருந்தால் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்தச் சுங்கக் கட்டணம் கணக்கிடும் முறை இப்போது மாற்றப்பட்டுள்ளது.
புதிய முறை
உதாரணமாக ஒரு தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 40 கி.மீ. என்று வைத்துக் கொள்வோம். அந்த 40 கிமீ சாலையில் 30 கி.மீ. உயர்த்தப்பட்ட மேம்பாலம் இருக்கிறது. மீதும் 10 கி.மீ. வழக்கமான சாலையாக இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அப்படிப் பார்த்தால் கட்டமைப்பு இருக்கும் பகுதியான 30 கிலோமீட்டரை 10 மடங்காக எடுத்துக் கணக்கிடுவார்கள். அதன்படி 300 கிமீ + சாதாரணச் சாலையான 10 என மொத்தம் 310 கி.மீட்டருக்கு சுங்க கட்டணத்தைக் கணக்கிட வேண்டும்.
இல்லையென்றால் தேசிய நெடுஞ்சாலையின் மொத்த நீளத்தின் 5 மடங்கு, அதாவது அதாவது, 5 x 40 கி.மீ. = 200 கி.மீட்டரை வைத்துக் கணக்கிட வேண்டும். இதில் 200 கிமீ தான் குறைவு என்பதால் அதை வைத்து சுங்க கட்டணத்தைக் கணக்கிடுவார்கள். அதன்படி ஒரு வழி கார் பயணத்திற்கு ரூ. 1.46/கி.மீ. என்ற விகிதத்தில் ரூ. 292 மட்டுமே செலவாகும். இந்த புதிய முறை மூலம் 50% வரை சுங்கக் கட்டணம் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது டாக்ஸி, லாரி என அடிக்கடி நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு மிகப் பெரியளவில் உதவும்.
அதிகக் கட்டணம் ஏன்
அதேநேரம் பாலங்கள், சுரங்கங்கள், மேம்பாலங்கள் அல்லது உயர்த்தப்பட்ட சாலைகளுக்கு மட்டும் ஏன் இப்படி 5 மடங்கு, 10 மடங்கு என்று வைத்துக் கணக்கிடுகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் வரும். அதற்கும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது நெடுஞ்சாலையில் சுரங்கங்கள், பாலங்கள் அல்லது உயர்த்தப்பட்ட சாலைகள் கட்ட அதிகச் செலவாகும். அந்தச் செலவை ஈடுகட்டவே இதுபோன்ற பகுதிகளுக்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது முதல்?
தற்போது அரசு நடத்தி வரும் சுங்கச்சாவடிகளுக்கு, அடுத்த கட்டணத் திருத்தத் தேதியிலிருந்து இந்த புதிய விதி அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்டு வரும் சுங்கச்சாவடிகளில் தொடக்கம் முதலே இந்தத் திருத்தப்பட்ட முறையில் இருந்து தான் கட்டணம் வசூலிக்கப்படும்.
ஒரு ட்விஸ்ட்
அதேநேரம் ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படும் சுங்கச் சாவடிகளுக்கு, நடைமுறையில் உள்ள ஒப்பந்தம் முடிந்த பிறகே இந்த புதிய முறையில் சுங்கக் கட்டணம் கணக்கிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி வருடாந்திர பாஸ் என்ற முறையை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் சுங்க கட்டணத்தைக் கணக்கிடும் முறையையும் மத்திய அரசு மாற்றியுள்ளது. இது பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications