தங்கச்சி ரைஸ் கேட்டுச்சு சார்.. மச்சான் என்ன பண்ணார் தெரியுமா.. கலகலக்க வைத்த மாமா.. வைரல் செய்தி!
டெல்லி: தினமும் கடைக்கு போய் அரிசி வாங்க சொல்லும் மனைவி.. கடுப்படித்ததால் லாரி நிறைய அரிசி வாங்கி அசத்திய கணவன்.. இதை பார்த்த மனைவி கோபமடைந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
தினமும் கடைக்கு சென்று காய்கறி வாங்குவது, மளிகை சாமான் வாங்குவது ஆகியவற்றை பெண்களும் ஆண்களும் கலந்து செய்கிறார்கள். ஒரு சில வீடுகளில் ஆண்கள்தான் இதைச் செய்வார்கள்.
அதிலும் பண்டிகை என வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.. விடுமுறையாச்சே ஆசுவாசுமாக இருப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் பத்து முறை கடைக்கு அனுப்பப்படுவர்.

இல்லாத கணவன்மார்கள்
இதனால் சிலர் நேரடியாக திட்டிக் கொண்டும், அதற்கு கொடுப்பனை இல்லாதவர்கள் மனதிற்குள் திட்டிக் கொண்டு போய் வாங்கி வருவார்கள். ஆனால் ஒருவர் செய்த காரியத்தை பார்த்தால் சிரிப்பாக வருகிறது. அவரது மனைவி தினமும் கணவரை அரிசி வாங்க அனுப்புகிறாராம். இதனால் கடைக்கு போய் போய் அவர் சோர்வாகிவிட்டார்.

கடைக்கு போன்
என்ன செய்யலாம் என யோசித்த அவர் தான் அடிக்கடி கடைக்கு போகக் கூடாது என்ற எண்ணத்தில் ஒரு காரியத்தை செய்துவிட்டு மனைவியின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார். பக்கத்தில் இருக்கும் கடைக்கு செல்வதற்கு சோம்பேறித்தனம் அடைந்து உட்கார்ந்த இடத்திலிருந்தே கடைக்கு போன் செய்துள்ளார்.

கோபம்
அப்போது அரிசி மூட்டைகளை அனுப்ப கேட்டுக் கொண்டார். அதன்படி வந்த லாரி வீட்டு வாசலில் நின்று கொண்டு ஹாரன் அடித்தது. போய் பார்த்தால் 23 மூட்டைகளில் அரிசி. இதை பார்த்த மனைவிக்கு கணவன் மீது கோபம் திரும்பியது.

23 அரிசி மூட்டைகள்
ஒரு மூட்டை அரிசியை இரு மாதத்தில் காலி செய்தாலும் 23 மூட்டைகளை காலி செய்ய ஒரு ஆண்டு ஆகுமே என கவலை ஒரு புறமிருக்க, இந்த அரிசி மூட்டைகளை எங்கே இறக்குவது என்ற கவலை மறுபுறம் ஏற்பட்டது. பின்னர் என்ன கணவனுக்கு மனைவி செம அர்ச்சனை செய்தார்!

குபீர் சிரிப்பு
இப்படி மனைவியிடம் சிக்கி கணவர் பட்ட இந்த ரைஸ் அவஸ்தை இப்போது வைரலாகியுள்ளது. வைரலாக்கியவர் அந்தப் பெண்ணின் உடன் பிறந்த அண்ணன்தான்.. மச்சான் செய்த காரியத்தையும், அதற்கு மனைவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதையும், அரிசி மூட்டையை என்ன பண்ணலாம் என்று லாரிக்காரர், மச்சான், தங்கை என குடும்பமே கூடி விவாதித்த குபீர் சிரிப்பு டிராமாவையும் லைவ் டிவீட்ஸ் போட்டு வைரலாக்கி விட்டார் இந்தப் புண்ணியவான்!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications