டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிதூள்.! உலகின் சிறந்த ஏர்போர்ட்.. பெங்களூருக்கு 2ஆம் இடம்! நம்ம சென்னைக்கு என்ன இடம் தெரியுமா

Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் தலைசிறந்த ஏர்போர்ட் தரவரிசை பட்டியலில் பெங்களூர் சர்வதேச விமான நிலையம் இரண்டாம் இடத்தில் உள்ளது. டாப் 10 இடங்களில் இந்தியாவில் இருந்து இரண்டு ஏர்போர்ட்களும் 3 ஏர்லைன் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

விமான போக்குவரத்து என்பது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கொரோனா காரணமாகக் கடந்த 2020 முதல் இரண்டு ஆண்டுகள் சர்வதேச விமானச் சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இப்போது கொரோனா வேக்சின் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் காரணமாக பெரும்பாலான நாடுகளில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டன. இதனால் மீண்டும் விமானச் சேவை பழையபடி திரும்பியுள்ளது.

அடிதூள்! ஆசியாவிலேயே பெங்களூர் தான் டாப்.. லிஸ்டில் வந்த மற்றொரு தென்னிந்திய நகரம்.. எது தெரியுமாஅடிதூள்! ஆசியாவிலேயே பெங்களூர் தான் டாப்.. லிஸ்டில் வந்த மற்றொரு தென்னிந்திய நகரம்.. எது தெரியுமா

விமானத்துறை

விமானத்துறை

விமான துறையில் இந்தியா வளர்ந்து வரும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் (கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆண்டுகளைத் தவிர்த்து) விமான பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் விமான துறையின் வளர்ச்சிக்குத் தொடர்ச்சியாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்ட நகரங்களைத் தவிர்த்து அடுத்தகட்ட நகரங்களுக்கும் விமானச் சேவையை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

பெங்களூர்

பெங்களூர்

இதனிடையே உலகில் சிறந்த சர்வதேச விமான நிலையங்கள் குறித்த பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. கடந்த 2022 ஆண்டிற்கான இந்த பட்டியலில் டெல்லி மற்றும் பெங்களூரு விமான நிலையங்கள் இடம் பெற்றுள்ளது. இது குறித்த செய்தியைத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இரு விமான நிலைய அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். விமானங்களைப் பொறுத்தவரைச் சரியான நேரத்தில் இயக்கப்பட வேண்டியது ரொம்பவே முக்கியம். இது பயணிகளுக்கு மட்டுமில்லை விமான நிறுவனங்களுக்கும் நல்லது தான். ஏனென்றால் கொஞ்ச நேரம் தாமதமாக இயக்கப்பட்டாலும் பெரிய அபராதம் விதிக்கப்படும்..

 3 இந்திய ஏர்லைன்கள்

3 இந்திய ஏர்லைன்கள்

அப்படி முறையாக நேரத்தைக் கடைப்பிடித்து இயக்கும் விமான நிலையங்களின் பட்டியலில் தான் டாப் 10 இடங்களில் இந்த இரு விமான நிலையங்கள் இடம் பெற்றுள்ளது. இது தவிர, இண்டிகோ, ஏர் ஏசியா இந்தியா மற்றும் விஸ்தாரா ஆகிய நாட்டின் மூன்று விமான நிறுவனங்கள் ஆசிய-பசிபிக்கில் இயக்கும் டாப் 10 விமான நிறுவனங்களில் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாராட்டு தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லிக்கும் இடம்

தலைநகர் டெல்லிக்கும் இடம்

விமானம் தாமதம் இல்லாமல் சரியான நேரத்திற்கு வந்து இறங்குகிறதா.. சரியான நேரத்திற்குப் புறப்படுகிறதா என்பதை வைத்து இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. சொல்லப்பட்ட நேரத்தைக் காட்டிலும் 15 நிமிடங்களுக்கு மேல் ஆனால், அவை தாமதமாகக் கருதப்படும். இதில் உலகின் டாப் 10 விமான நிலையங்களின் பட்டியலில், பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா ஏர்போர்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேபோல தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஏர்போர்ட் இதில் 7ஆவது இடத்தில் உள்ளது.

யாருக்கு எந்த இடம்

யாருக்கு எந்த இடம்

அதேநேரம் இரு விமான நிலையங்களுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. கெம்பேகவுடா ஏர்போர்ட் சரியான நேரத்தில் இயக்குவதில் 84.08% பெற்ற நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் இதில் 81.84%ஐ பெற்றுள்ளது. டாப் ஏர்லைன்கள் பட்டியலில் 84.11% உடன் இண்டிகோ உலக அளவில் 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. 83.7% உடன் ஏர் ஏசியா இந்தியா 6ஆவது இடத்திலும் 80.98% உடன் விஸ்தாரா 9ஆவது இடத்தில் உள்ளது. இண்டிகோ தவிர்த்து இந்த இரு ஏர்லைன்களிலும் டாடா முதலீடு செய்துள்ள நிலையில், இவை டாடாவின் ஏர் இந்தியாவுடன் விரைவில் இணைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னைக்கு 6ஆவது இடம்

சென்னைக்கு 6ஆவது இடம்

முன்னதாக கடந்த நவ. மாதம் புகழ்பெற்ற ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் தெற்கு ஆசிய ஏர்போர்ட்களில் சிறந்தவை குறித்த பட்டியலை வெளியிட்டு இருந்தது. இதில் நேரத்தைப் பின்பற்றுவது மட்டுமின்றி பல்வேறு அம்சங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் தெற்காசியாவில் சிறந்த ஏர்போர்டாக டெல்லி விமான நிலையம் தேர்வானது. பெங்களூரு,மற்றும் ஐதராபாத் ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த விமான நிலையங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தது. இதில் நான்காவது இடத்தில் மும்பை விமான நிலையம் உள்ளது. இதில் 5ஆவது இடத்தில் இலங்கையில் கொழும்பு உள்ள நிலையில், சென்னை 6ஆவது இடத்தில் உள்ளது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

கொல்கத்தா, கொச்சி, அகமதாபாத் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இந்த ஸ்கைட்ராக்ஸ் ரேங்கிங் சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்த 1999ஆம் ஆண்டு முதல் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் இதற்காக விருதுகளையும் வழங்கி வருகிறது. உலகெங்கும் உள்ள 500க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் வாடிக்கையாளர் சேவை மற்றும் வசதிகளை மதிப்பிட்டு இது ரேங்கிங் வெளியிடுகிறது. சர்வதேச அளவில் இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

English summary
Bangalore and Delhi had their spots in top airports across the globe: Chennai lists 6th place in South India's best airports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X