Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொழில் வளர்ச்சி முடங்குவதற்கு.. தொழிற்சங்கங்கள் முக்கிய காரணம்! - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டில் தொழில் வளர்ச்சி முடங்குவதற்கு தொழிற்சங்கங்கள் முக்கிய காரணம் என்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்து தொழிற்சங்க தலைவர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சி முடங்குவதற்கு தொழிற்சங்கவாதமே முக்கிய காரணம் என்று தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருக்கிறார். நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்படும் நலத்திட்டங்கள் சில சமயங்களில் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்த அவர், வீட்டுப் பணியாளர்கள் தொடர்பான வழக்கு ஒன்றின் விசாரணையின்போது இக்கருத்துகளை வெளியிட்டார்.

Trade Unions CJI

நீதிபதியின் எச்சரிக்கை

தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பக்சி அடங்கிய அமர்வு, பெண் தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை விசாரித்தது. வீட்டுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிப்பது உட்பட, அவர்களின் நலன்களைக் கோரும் இவ்வழக்கை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, ஒவ்வொரு குடும்பமும் வழக்கில் சிக்கும் என்று எச்சரித்து, இது பரவலான வழக்குகளுக்கு வழிவகுக்கும் எனக் கூறினார்.

தொழிற்சங்கங்கள்

விசாரணையின்போது, தொழிற்சங்கங்களின் பங்கு குறித்து பேசிய தலைமை நீதிபதி, பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதற்கு அவற்றைக் கேள்விக்குள்ளாக்கினார். "நாட்டில் எத்தனை தொழில் பிரிவுகள் தொழிற்சங்கங்களால் மூடப்பட்டுள்ளன? யதார்த்தத்தைப் புரிந்துகொள்வோம். பாரம்பரிய தொழில்கள் அனைத்தும் இந்த கொடி பிடிக்கும் சங்கங்களால்தான் மூடப்பட்டுள்ளன. தொழில்துறை வளர்ச்சியைத் தடுப்பதில் தொழிற்சங்கத் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்" என்பதை அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஊதியம்

மேலும், "குறைந்தபட்ச ஊதியம் மேலும் சிரமங்களை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, சுரண்டல் இருப்பதை ஒத்துக்கொண்டார். எனினும், தனிப்பட்ட உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல், திறன்களை வளர்ப்பது, கட்டமைப்பு சீர்திருத்தங்கள் போன்ற மாற்று வழிகளை அவர் முன்வைத்தார். தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான சமநிலையைக் கருதாமல் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது வேலைவாய்ப்புகளைக் குறைக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து மேலும் கூறுகையில், "நீங்கள் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்தால், மக்கள் பணியாளர்களை அமர்த்தத் தயங்குவார்கள், இதனால் மேலும் சிரமங்கள் ஏற்படும்" என்று கூறினார்.

சிபிஎம் கண்டனம்

இந்த கருத்துகளுக்கு தொழிற்சங்க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள ஒருவரிடம் இருந்து இத்தகைய கருத்தை யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற வகையில் நீதிபதியின் இந்தக் கருத்து பொறுப்பற்றத்தனமாக இருக்கிறது.

நீதிமன்றத்திற்கு வராதீர்கள்

நாட்டில் எத்தனை தொழிற்சாலைகள் தொழிற்சங்கங்களால் மூடப்பட்டன என்பதற்கான விபரங்களை நீதிபதி அவர்கள் வெளியிடுவாரா? தொழிலாளர்கள் நலச் சட்டங்களை முதலாளிகள் நடைமுறைப்படுத்த மறுக்கிறபோது, இனி நீதிமன்றத்திற்கு வராதீர்கள் என்பதைத்தான் மேற்கொண்ட கருத்தின் மூலம் நீதிபதி அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.

"நீதிபதியின் லட்சணம்"

தலைமை நீதிபதியே இந்த லட்சணத்தில் இருந்தால்.. அவருக்கு கீழ்நீதிமன்ற நீதிபதிகள் எப்படி இருப்பார்கள்? நீதிபதி அவர்கள் இந்த தவறான கருத்தை திரும்பப்பெற அனைவரும் வலியுறுத்த வேண்டும்" என தனது x பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+