செம்ம மூவ்.. இனி ட்ரூ காலருக்கு அவசியமில்லை.. போன் காலிலேயே பெயரும் காட்டும்! 'ட்ராய்' அதிரடி
டெல்லி: செல்போனில் எதிர்முனையில் அழைப்பவர்களின் பெயர்களை திரையில் காட்டும் தொழில்நுட்பத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் யார் செல்போனில் நம்மை அழைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க ட்ரூ காலர் போன்ற ஆப்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
அதேபோல, ஸ்கேம் கால்களையும், நமக்கு தேவையற்ற அழைப்புகளையும் கூட நம்மால் அடையாளம் கண்டு அவற்றை தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

'டார்ச்சர்' கால்கள்..
இன்றைய காலக்கட்டத்தில், ஸ்மார்ட்போன்கள் என்பது நமது வாழ்வில் இருந்து விலக்க முடியாத ஒரு அங்கமாகவே மாறிப் போய்விட்டது. ஸ்மார்ட்போன்கள் நமக்கு பல வகைகளில் பேருதவியாக இருக்கிறது என்பதை யாராலுமே மறுக்க முடியாது. அதே சமயத்தில், தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைகிறதோ அந்த அளவுக்கு அதை பயன்படுத்தி மோசடி செய்யும் செயல்களும் அதிகரித்து வருகின்றன. மறுபுறம், கடன் வேண்டுமா லோன் வேண்டுமா என செல்போன்களில் தொடர்புகொண்டு தொந்தரவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பல முக்கியமான நேரங்களில், இதுபோன்ற அழைப்புகள் நம்மை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுவிடும்.

ட்ரூ காலர் ஓகே, ஆனால்..
ஸ்மார்ட்போன்களில் பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட போதிலும், இப்போது வரை எதிர்முனையில் யார் அழைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் பல தொல்லைகளுக்கும், மோசடிகளுக்கும் மக்கள் ஆளாகி வந்தனர். மக்களின் இந்த பிரச்சினையை புரிந்துகொண்ட சில தொழில்நுட்ப நிறுவனங்கள், எதிர்முனையில் அழைப்பவர்களின் பெயர்களை நமக்கு தெரியப்படுத்தும் 'ஆப்'களை (செயலிகள்) அறிமுகப்படுத்தின. ட்ரூ காலர், ஷோ காலர், கால் ஆப் போன்றவை இவற்றில் அடங்கும். ஆனால், இந்த செயலிகளில் சில சிக்கல்கள் இருக்கின்றன.

நம்பகத்தன்மை கேள்விக்குறி..
இந்த செயலிகளை நாம் பதிவிறக்கம் செய்தால் எதிர்முனையில் யார் அழைக்கிறார்களோ அவர்களின் பெயர் ஸ்க்ரீனில் காட்டிவிடும். ஆனால், இந்த செயலிகள் தரவுகளின் அடிப்படையில் செயல்படுபவை அல்ல. யார் யாரெல்லாம் இந்த செயலிகளை பயன்படுத்துகிறார்களோ, அவர்களின் தொடர்புகளை அந்த செயலிகள் காப்பி அடித்துக்கொள்ளும். அதன் அடிப்படையில்தான் இவை இந்த சேவையை வழங்குகின்றன. ஒருவேளை, குறிப்பிட்ட நம்பரை வேறொருவர் பயன்படுத்த தொடங்கினால் அந்த நபரின் பெயரை இந்த செயலிகள் காட்டாது. எனவே இதுபோன்ற செயலிகளில் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருந்தது.

அறிமுகமாகும் புதிய வசதி..
இந்நிலையில், அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் எதிர்முனையில் யார் அழைக்கிறார்கள் என்பதை கண்டறியும் வசதியை ட்ராய் அமைப்பே அறிமுகப்படுத்தவுள்ளது. பயனர்களிடம் இருந்து பெறப்படும் கேஒய்சி (Know your customer) தகவல்களின் அடிப்படையில் இந்த புதிய தொழில்நுட்பம் செயல்படும் என்பதால், எதிர்முனையில் யார் அழைக்கிறார் என்பதை மிகத் துல்லியமாக இவை காட்டிவிடும். இதனால் தேவையற்ற அழைப்புகளையும், பிறகு பேசிக்கொள்ளலாம் என நாம் நினைக்கும் அழைப்புகளையும் நம்மால் அடையாளம் காண முடியும். இந்த தொழில்நுட்பத்தை அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தவும் ட்ராய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications