டெல்லியில் கடும் நில அதிர்வு.. கட்டிடங்கள் அதிர்ந்ததால் அச்சம்.. வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள்
டெல்லி: தலைநகர் டெல்லியில் வலிமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உணரப்பட்ட இந்த நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டதாக டெல்லி மக்கள் தெரிவித்தனர். நில அதிர்வால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். உயரமான கட்டிடங்களில் வசித்த மக்கள் நில அதிர்வை கடுமையாக உணர்ந்ததால் அச்சம் அடைந்து அவசர அவசரமாக வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

டெல்லி மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. பிற்பகல் 2.25 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. நேபாளத்தில் 6.2 என்ற அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதையடுத்து டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் உணரப்பட்டுள்ளது.
டெல்லியில் உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலக கட்டிடங்களில் இந்த நில அதிர்வினை நன்கு உணர முடிந்தது. சீலிங் பேன்கள், அலங்கார விளக்குகள் எல்லாம் நில அதிர்வால் ஆடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. நில அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து அதிர்ந்த மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தனர்.
இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. டெல்லி வாசிகள் பலரும் நில அதிர்வு கருத்து குறித்து தங்கள் அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல் டெல்லியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்னோவிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
உத்தரகாண்ட் தலைநகர் டேராடூன் ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அலுவலகங்கள் பலவும் உடனடியாக கட்டிடத்தை விட்டு ஊழியர்கள் வெளியேறும் வகையில் எச்சரிக்கை ஒலியையும் எழுப்பியது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தனது அலுவலகத்தை விட்டு வெளியேறி வீதியான இடத்திற்கு வந்து நின்றார்.












Click it and Unblock the Notifications