‛எம்பி பதவி போனாலும் விடலையே’.. மஹுவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை அதிரடி சம்மன்.. வழக்கு இதுதான்
டெல்லி: தொழிலதிபர் அதானி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் லஞ்சமாக பெற்ற வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் நடந்துள்ள மோசடி தொடர்பான வழக்கில் வரும் பிப்ரவரி 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி மஹுவா மொய்த்ரா எம்பிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா . மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் தொகுதி எம்பியாக இருந்தார். நாடாளுமன்றத்தில் இவர் பாஜகவினரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்நிலையில் தான் அதானி விவகாரம் குறித்த நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் பணம், பல்வேறு பரிசுப் பொருட்களை லஞ்சமாக பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.
இதுபற்றிய புகார் பற்றி நாடாளுமன்ற நெறிமுறைக்குழு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின்போது மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுக்கு நிரூபணம் ஆனது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதாவது நாடாளுமன்றத்தில் லோக்சபா, ராஜ்யசபா எம்பிக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றால் அதற்கான இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்காக எம்பிக்களுக்கு தனியே பாஸ்வேர்ட் எம்பிக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும். இந்த பாஸ்வேர்ட்டுகளை பயன்படுத்தி எம்பிக்கள் கேள்விகள் எழுப்பலாம். ஆனால் இந்த பாஸ்வேர்ட்டை மஹுவா மொய்த்ரா எம்பி தொழிலதிபர் தர்ஷன் ஹிரா நந்தன் என்பவரிடம் வழங்கியதாவும், எம்பி சார்பில் அந்த தொழிலதிபரே கேள்வி கேட்டதும் தெரியவந்தது.
இதற்காக மஹுவா மொய்த்ரா தொழிலதிபரிடம் பணம், பரிசு பொருட்களை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ரூ.2 கோடி வரை பணம் கைமாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே தான் வெளிநாட்டு பண பரிவர்த்தனையில் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அமலாக்கத்துறை விசாரித்த வருகிறது. இந்நிலையில் தான் பிப்ரவரி 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சார்பில் மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மஹுவா மொய்த்ரா சிக்கலில் மாட்டியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications