திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் ராய் டெல்லியில் திடீர் மாயம்- மகன் புகாரால் பரபர
டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முகுல் ராய் டெல்லியில் திடீரென மாயமாகிவிட்டார் என அவரது மகன் கூறியிருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநில மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் முகுல் ராய். டெல்லி சென்ற முகுல் ராய் காணவில்லை என அவரது மகன் Subhargshu Roy கூறியிருக்கிறார். கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு GE-898 என்ற இண்டிகோ விமானத்தில் முகுல் ராய் சென்றார். இந்த விமானம் நேற்று இரவு 9.55 மணிக்கு டெல்லியை சென்றடைந்தது. ஆனால் அதன் பின்னர் முகுல் ராயை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது Subhargshu Roy புகார்.

இருப்பினும் இது தொடர்பாக விமான நிலைய போலீசாரிடம் புகார் எதுவும் தரப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. முகுல் ராய், திரிணாமுல் காங்கிரஸில் மமதா பானர்ஜிக்கு அடுத்த தலைவராக இருந்தார். 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸுக்கு குட்பை சொல்லிவிட்டு பாஜகவில் இணைந்தார். பாஜகவின் தேசிய துணைத் தலைவராகவும் பதவி பெற்றார் முகுல் ராய்.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக 18 இடங்களைக் கைப்பற்றுவதற்கு முகுல் ராய் முக்கிய காரணமாக இருந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். ஆனால் திடீரென மமதா பானர்ஜியின் தலைமையை ஏற்று திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார் முகுல் ராய்.
அவரது மனைவியின் மரணத்துக்குப் பின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் முகுல் ராய். அவருக்கும் மகனுக்கும் இடையே சொத்து விவகாரங்களில் பிரச்சனை இருந்ததாகவும் கூறப்படுகிறது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications