மோடி, அமித்ஷாவுக்கே “தொப்பி”.. ஏமாற்றிய “மிஸ்டர் ஏ” அத்வானி இல்லை! நாடாளுமன்றத்தில் கர்ஜித்த மஹுவா
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, அதானியை மிஸ்டர் ஏ என்று அழைத்து நாட்டையே ஏமாற்றிவிட்டார் பேசியுள்ளார்.
டெல்லி: அதானி நிறுவன ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசிய நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, அவரை மிஸ்டர் ஏ என்று அழைத்து நாட்டையே ஏமாற்றிவிட்டார் என்று ஆவேசமாக பேசியபோது பாஜகவினர் முழக்கம் எழுப்பினர்.
தொழிலதிபர் கௌதம் அதானி போலியான நிறுவனங்களை தொடங்கி தன்னுடைய பங்கு மதிப்பை உயர்த்திக்காட்டி உலகின் 2 வது பெரும் பணக்காரரானதாக ஹிட்டன்பெர்க் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தகவல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி கடன் பெற்றுள்ள அதானி நிறுவனத்தின் பங்குகள் பன்மடங்கு சரிந்ததால் உலக பணக்காரர் வரிசையில் 10 வது இடத்துக்கு கீழ் சரிந்தார் அதானி. எல்.ஐ.சிக்கும் அதானியால் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திரிணாமூல் எம்பி
இந்த நிலையில் நேற்று லோக் சபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்தா அதானியின் பெயரை குறிப்பிடாமல் மிஸ்டர் ஏ என்று சுட்டிக்காட்டி அவரை சாடினார். "பிரபலமான நபரின் பெயர் "A" இல் தொடங்கி "I" இல் முடியும். அவர் அத்வானி இல்லை. அரசுடன் தொடர்பில் இருந்த அந்த முதலாளி நாட்டையே ஏமாற்றிவிட்டார்." என்று கூறினார்.

தடை செய்யப்பட்ட வார்த்தை
அப்போது நாடாளுமன்றத்தில் தடை செய்யப்பட்ட வார்த்தை ஒன்றை அவர் பயன்படுத்தியதால் பாஜக எம்பிக்கு அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர், ஹிண்டன்பெர்க் ஆய்வு அறிக்கையி அடிப்படையில் அதானி குழுமம் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ரிமோட் கண்டிரோல் பிரதமர்
அவர் தனது உரையில், "மிஸ்டர் ஏ உங்கள் குழுவினருடன் பயணம் செய்தார். பல நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்தபோது அவர்களை சந்தித்தார். ரிமோட் கண்டிரோல் பிரதமர் என உலகின் முன்னிலையில் தன்னை அவர் காட்டிக்கொண்டார். தனி நபரின் சொத்து என்பது இந்தியாவின் பெருமை கிடையாது. நிறுவன கட்டமைப்புகளின் வலிமையில்தான் இந்தியாவின் பெருமை உள்ளது.

மோடி, அமித்ஷாவுக்கு தொப்பி
பிரதமர் நரேந்திர மோடிக்கு அதானி தொப்பி போட்டுவிட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அதானி தொப்பி போட்டுவிட்டார். காரணம், அவர் உங்கள் துறையிடம்தான் பாதுகாப்பு அனுமதி பெற்றார். அதானி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் தொப்பி மாட்டிவிட்டார். அவர் விரும்பும் நேரத்தில் எல்லாம் பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி யின் பணத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

மத்திய அமைச்சர்களுக்கு தொப்பி
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும் அதானி தொப்பி போட்டு உள்ளார். மத்திய சுங்கத்துறை அமைச்சருக்கும் தொப்பி மாட்டிவிட்டு உள்ளார் அதானி. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சருக்கும் அதானி தொப்பி அணிவித்து இருக்கிறார். அதானி மத்திய மின்துறை அமைச்சருக்கும் தொப்பி மாட்டு உள்ளார்." என்றார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications