முத்தலாக் மசோதா எப்படி நிறைவேறியது.. யாரெல்லாம் ஆதரவு, எதிர்ப்பு.. கடைசியில் நிகழ்ந்த டிவிஸ்ட்!
முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடந்து வருகிறது.
Recommended Video
டெல்லி: முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் வெற்றிபெற்றுள்ளது. இந்த முத்தலாக் தடை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசமும் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.
கடந்த வாரம் லோக்சபாவில் மீண்டும் முத்தலாக் தடை சட்ட மசோதாவை பாஜக தாக்கல் செய்தது. இது லோக்சபாவிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலையில் இன்று ராஜ்யசபாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான வாக்கெடுப்பு தற்போது நடந்து முடிந்துள்ளது.முத்தலாக் தடை சட்ட மசோதா தற்போது ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

எத்தனை பேர்
இந்த மசோதாவிற்கு 99 எம்பிக்கள் ஆதரவு அளித்தனர். 84 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே அதிமுக எம்பிக்கள் வெளியேறினர். இதே போல் முக்கிய கட்சியை சேர்ந்த எம்பிக்கள் எல்லோரும் வெளிநடப்பு செய்தனர்.

என்ன பலம்
ஐந்து காலியிடங்கள் போக தற்போது ராஜ்யசபாவில் பலம் மொத்தம் 240 எம்பிக்கள். இங்கு மசோதா நிறைவேற வேண்டும் என்றால் 121 எம்பிக்கள் பலம் வேண்டும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 110 எம்பிக்கள் பலம் இருக்கிறது.

எதிர்ப்பு கட்சிகள்
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள்:
திமுக
காங்கிரஸ்
திரிணாமுல் காங்கிரஸ்
தெலுங்கு தேசம் கட்சி
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
பகுஜன் சமாஜ்
சமாஜ்வாதி
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி
அதிமுக

ஆதரவு கட்சிகள்
இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகள்:
பாஜக
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதிமுக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரவு.

யார் இல்லை
எதிர்ப்பு தெரிவித்துவிட்டு வாக்களிக்காத கட்சிகள்:
தெலுங்கு தேசம் கட்சி - 2 எம்பிக்கள்
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி -6 எம்பிக்கள்
பகுஜன் சமாஜ் - 4 எம்பிக்கள்
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி - 1 எம்பி
அதிமுக - 11 எம்பிக்கள்
ஐக்கிய ஜனதா தளம் - 6 எம்பிக்கள்
மொத்தம் வெளிநடப்பு - 30

கணக்கு
இதனால் இந்த மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகள், எதிராக 84 வாக்குகள், வெளிநடப்பு 30 பேர் என்பதால் மசோதா நிறைவேறியது. இதன் மூலம் முத்தலாக் தடை சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.

கடைசி நேரம்
இந்த முக்கிய எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளதால் ராஜ்யசபாவில் மசோதா நிறைவேறியது. இந்த எதிர்ப்பு தெரிவித்த கட்சிகள் எல்லாம் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு எதிர்த்து வாக்களித்து இருந்தால் மசோதா தோல்வி அடைந்து இருக்கும். ஆனால் இவர்கள் வெளிநடப்பு செய்ததால் மசோதா வெற்றிபெற்றது.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
வாட்ஸ்அப்பில் வந்த முத்தலாக்'.. குவைத்தில் இருந்து ராஜஸ்தான் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த கணவர் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications