திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி.. இந்தியா டுடே கணிப்பு.. காங், கம்யூனிஸ்டை பதம் பார்க்கும் முடிவு
திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : திரிபுராவில் கடந்த 16-ந் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் 88% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டுடே தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிளில் பாஜக 36 முதல் 45 இடங்களை கைப்பற்றும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 11 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் திப்ரா மோத்தா பார்டி என அழைக்கப்படும் டிஎம்பி கட்சி 9 முதல் 16 இடங்களில் வெற்றி பெறும் என கணித்துள்ளது இந்தியா டுடே.
திரிபுரா மாநிலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆனால் அங்கு காங்கிரஸ் கட்சியை மொத்தமாக காலி செய்து மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்தது.
கடந்த 2018ம் ஆண்டு நடத் தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 51 இடங்களிலும், ஐபிஎஃப்டி 9 இடங்களிலும், இடது முன்னணி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சி 59 இடங்களில் தனித்தும் போட்டியிட்டது

எப்படி இருக்கும்
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சர்த்தில் ஆழ்த்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்து. எனினும் பாஜக கூட்டணிக்கும் இடது முன்னணி கூட்டணிக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. 5 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகளுக்கும் குறைவாகவும், 29 தொகுதிகளில் 5000 வாக்குகளுக்கு குறைவாகவே வாக்கு வித்தியாசம் இருந்தது.

கடும் போட்டி
கடந்த 2018ம் ஆண்டு 36 தொகுதிகளை வென்ற பாஜக மொத்த வாக்கு சதவிகிதத்தில் 43.59 சதவிகிதத்தை பிடித்தது.. அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி கட்சி கடந்த தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்து. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே வாக்கு வித்தியாசம் 0.63 சதவிகித அளவே வாக்கு வித்தியாசம் இருந்தது,

எப்படி இருக்கும்
திரிபுரா பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாநிலம் என்கிற நிலையில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கூட்டணி கடந்த 2018ம் ஆண்டு கைப்பற்றியது. பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில் இது பாதிக்கு பாதியாக இருந்தது. இந்நிலையில் திரிபுரா சட்டசபை தேர்தல் கடந்த 16ம் தேதி நடந்தது , இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 55 தொகுதிகளிலும், ஐபிஎஃப்டி 5 தொகுதிகளிலும், இடது முன்னணி- காங்கிரஸ் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளிலும், இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. திப்ரா மோர்ச்சா கட்சி இந்தத் தேர்தலில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 பழங்குடியினர் அதிகம் உள்ள மாவட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியது இந்த கட்சி தான் .

திரிபுராவில் பாஜக
திரிபுராவில் கடந்த 16-ந் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் 88% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என இந்தியா டுடே தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் உள்ள 60 தொகுதிளில் பாஜக 36 முதல் 45 இடங்களை கைப்பற்றும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் கூட்டணி 6 முதல் 11 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் திப்ரா மோத்தா பார்டி என அழைக்கப்படும் டிஎம்பி கட்சி 9 முதல் 16 இடங்களில் வெற்றி பெறும் என கணித்துள்ளது.

பாஜகவிற்கு வாக்குகள்
மேற்கு திரிபுராவில் மொத்தம் 29 இடங்கள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 19 இடங்களிலும் (45 சதவீத வாக்குகளுடன்), கம்யூனிஸ்ட காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் (32 சதவீத வாக்குகளுடன்), டிஎம்பி கட்சி 6 இடங்களிலும் (18 சதவீத வாக்குகளுடன்) வெல்லும் என இந்தியா டுடே கணித்துள்ளது, ஒட்டுமொத்த திரிபுராவில் இந்தியா டுடே-மை ஆக்சிஸ் இந்தியா கருத்துப்படி, பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் பெறும், அதே நேரத்தில் இடது-காங்கிரஸ் கூட்டணி 32 சதவீத வாக்குகளைப் பெறக்கூடும். பிரத்யோத் பிக்ரம் மாணிக்யா தேப் பர்மா தலைமையிலான திப்ரா மோதா 20 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications