மீண்டும் மீண்டுமா? இந்தியா-பாக் போர் நிறுத்தத்திற்கு உரிமை கோரிய டிரம்ப்! ஈரான் போரை நிறுத்தனுமாம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும், அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறி வரும் நிலையில், டிரம்ப் நான்தான் போரை நிறுத்தினேன் என்று மீண்டும் உரிமை கோரியுள்ளார். அதேபோல ஈரான்-இஸ்ரேல் தலைவர்களும் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது, "ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை போட வேண்டும். நிச்சயம் அவர்கள் செய்வார்கள். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நான் வர்த்தகத்தைப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் ஒற்றுமையை கொண்டுவந்து, இரு சிறந்த தலைவர்களையும் கொண்டு விரைவாக முடிவெடுக்க வைத்து சண்டையை நிறுத்தியது போல.. ஈரானும்-இஸ்ரேல் தலைவர்களும் போரை நிறுத்துவார்கள்.

Trump Pakistan ceasefire

எனது முதல் பதவிக்காலத்தின்போது, செர்பியாவும் கொசோவோவும் தீவிரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இந்த நீண்டகால போராக வெடிக்கத் தயாராக இருந்தது. நான் அதை நிறுத்தினேன். மற்றொரு உதாரணம் எகிப்தும் எத்தியோப்பாவும். மிகப்பெரிய அணை தொடர்பான அவர்களது சண்டை, நைல் நதியைப் பாதித்திருந்தது. என்னுடைய தலையீட்டால், இப்போதைக்கு அமைதி நிலவுகிறது. அது நீடித்திருக்கும்!

அதேபோல, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே விரைவில் அமைதி வரும்! பல பேச்சுவார்த்தைகள் இப்போது நடைபெறுகின்றன. நான் நிறைய செய்கிறேன், எதற்கும் எனக்குப் பெருமை கிடைப்பதில்லை, ஆனால் பரவாயில்லை, மக்களுக்குப் புரியும். மத்திய கிழக்கை மீண்டும் சிறப்பாக்குவோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், டிரம்ப் உருட்டுவாதாக பலரும் கூறுகின்றனர். அவ்வளவு ஏன், டிரம்ப்பின் நெருங்கிய நண்பராக அறியப்படும் பிரதமர் நரேந்திர மோடி கூட, இந்தியா-பாக் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. மத்திய அரசு அதிகாரிகள், டிரம்ப்பின் கூற்றை நிராகரித்து வருகிறார்கள். இருப்பினும், மீண்டும் மீண்டும் டிரம்ப் போர் நிறுத்தத்திற்கு தொடர்ந்து உரிமை கோரி வருகிறார். மத்திய அரசும் வெளிப்படையாக இதை மறுக்காமல் இலை மறை காயாக கருத்து தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் டிரம்பின் பதிவு சோஷியல் மீடியாக்களில விவாதங்களை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சியினர், டிரம்ப்பின் கருத்தை மேற்கோள் காட்டி, இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்கிறது? என்று குடைந்து வருகிறார்கள். பாஜகவினரோ, என்னென்னவோ சொல்லி பார்க்கிறார்கள். ஆனால், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. இனியாவது மத்திய அரசு வெளிப்படையாக, 'இந்தியா-பாக்' போர் நிறுத்தத்தில் டிரம்ப்புக்கோ, அமெரிக்காவுக்கோ சம்பந்தம் இல்லை என்று சொல்லுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+