Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மார்ச் மாதம் நடக்க போகும் பெரும் மாற்றம்.. இந்தியாவை பணவீக்கத்தை நோக்கி தள்ளும் டிரம்ப்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டிரம்ப் மீண்டும் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள நிலையில் பல முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுகள் இந்தியாவின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும், இது வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த பணவீக்கத்திற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய்தான். கடந்த 2019ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி முக்கியமான விஷயத்தை ஆய்வு செய்து கூறியிருந்தது. அதாவது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெறும் $10 உயர்ந்தால், அது இந்திய பணவீக்கத்தை 0.4% அளவுக்கு அதிகரிக்கும். சரி இதுக்கும், மார்ச் மாதம் நடக்க போகும் மாற்றத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

petrol diesel international

இந்தியாவில் பெட்ரோலை விற்பனை செய்யும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்துதான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகின்றன. இந்த எண்ணெய்யை இந்தியாவில் வைத்து பெட்ரோல் தனியாக, டீசல் தனியாக பிரித்து விற்பனை செய்கிறது. கடந்த ஆண்டு நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவிகிதத்தை ரஷ்யாவிடமிருந்துதான் வாங்கியிருக்கின்றன. 2025ல் இது இன்னும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஈராக், ஈரான் உள்ளிட்ட அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் இருந்தாலும் ஏன்? இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியது என்றால், டிஸ்கவுண்ட் தான் காரணம். உதாரணத்திற்கு அரபு நாடுகள் 5 ரூபாய்க்கு கச்சா எண்ணெய்யை விற்கிறது எனில், நம்மாளு ரஷ்யா 3 ரூபாய்கு தரேன் என்று அறிவித்து. இதனால்தான் ரஷ்யாவிடம் இந்தியா வியாபரம் செய்தது.

இந்த வியாபாரத்திற்கு டிரம்ப் தற்போது செக் வைத்திருக்கிறார். அதாவது ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்திருக்கிறது. யாரும் ரஷ்யா கூட 'அன்னம் தண்ணி பழகக்கூடாது' என்று கராறாக சொல்லிவிட்டது. மார்ச் 12ம் தேதியிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வர இருக்கிறது. இதுதான் இந்தியாவுக்கு சிக்கல்.

ஆனால் இந்தியா ஒன்னும், அமெரிக்காதான் கதி என்று கிடக்கவில்லை. எனவே அவங்க சொன்னதை நாம அப்படியே கேட்டுக்கனும்னு அவசியமும் இல்லை. இருந்தாலும், அமெரிக்கா பேச்சை கேட்காம போன.. சைனா நம்மகிட்ட பஞ்சாயத்து பண்ணும்போது, சப்போர்ட்டுக்கு அமெரிக்கா வராம போயிடும். அதனால கொஞ்சம் யோசிச்சு சூதானமா இருந்துக்கனும்.

சரி என்ன இப்போ, ரஷ்யாகிட்ட பெட்ரோல் வாங்க கூடாது. அவ்வளவுதானே.. என்னையிலிருந்து வாங்க கூடாது? வரும் மார்ச் 12ம் தேதியிலிருந்து. சரி விடு, இனி உன்கிட்ட பெட்ரோலை வாங்கிக்கிறேன் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியிருக்கிறார்.

அமெரிக்கா அநியாய விலைக்கு விற்கும். மட்டுமல்லாது அவங்களுக்கு அமெரிக்க டாலரை கொடுத்தால்தான் பெட்ரோலை தருவார்கள். டாலருக்கு நாம எங்க போகுறது? இதே பங்காளி ரஷ்யாவா இருந்தா.. ரூபாயை கொண்டா, பெட்ரோலை புடினு வியாபாரம் பண்ணியிருப்பான்.

ஆக இப்படியாக வரும் மார்ச் மாதம் முதல் இந்தியா அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்க கூடும். ரஷ்யாவை விட அதிக விலையில்தான் அமெரிக்கா வியாபராம் செய்யும். இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும். இந்த விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரித்து நம்மை போன்ற சாமானிய மக்கள் தலையில்தான் வந்து விடியும். எனவே மார்ச் மாதத்திலிருந்து மனசை தேத்திக்கோங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+