Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் விதித்த 100 சதவீதம் வரி.. உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.. இந்தியா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அக்டோபர் ஒன்று முதல் 'மருந்து பொருட்களின் இறக்குமதிக்கு 100% வரை வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அதாவது எந்தவொரு பிராண்டட் அல்லது காப்புரிமை பெற்ற மருந்து தயாரிப்புக்கும் 100% வரி விதிக்கப்பட உள்ளது. இந்த அறிவிப்பின் தாக்கம் என்பது இந்தியாவில் பெரிய அளவில் இருக்காது என்றே கூறப்படுகிறது. எனினும் இதன் தாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100% வரி விதிப்பதாக அண்மையில் அறிவித்தார். இந்த அறிவிப்பு அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது. இந்த 100% வரி என்பது 'பிராண்டட்' (Branded) அல்லது 'காப்புரிமை பெற்ற' (Patented) மருந்துப் பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.

Trump India

அதேநேரம் ஒரு மருந்து நிறுவனம் அமெரிக்காவில் தங்கள் உற்பத்தி ஆலையை அமைக்கும் பணியை ஆரம்பித்திருந்தால் (அதாவது, 'அடித்தளம் அமைத்தல்' அல்லது 'கட்டுமானத்தில் இருப்பது') அவர்களுக்கு இந்த 100% வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மற்ற நாடுகள் அமெரிக்காவிற்குப் பொருட்களை 'அதிகமாக' அனுப்புவதைத் தடுக்கவும் இந்த வரிகளை விதிப்பதாக விளக்கம் அளித்துள்ளார்,

இந்த அறிவிப்பு இந்திய மருந்துத் துறை நிறுவனங்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஜெனரிக் மருந்துகளுக்கு விலக்கு அளித்துள்ளதால் சிக்கல் குறைவு. ஏனெனில் இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜெனரிக் மருந்துப் பொருட்கள் உற்பத்தியாளராக உள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் மருந்துகளில் பெரும்பாலானவை ஜெனரிக் வகையைச் சேர்ந்தவையாகும்.

டிரம்ப்பின் அறிவிப்பு, தற்போது பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், இந்தியாவின் ஜெனரிக் மருந்து ஏற்றுமதிக்கு உடனடிப் பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது. அதேநேரம் சன் பார்மா போன்ற சில இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் பிராண்டட் மருந்துகளை அதிக அளவில் விற்பனை செய்கின்றன. அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகள் இல்லாத நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்படலாம். எனினும் டாக்டர் ரெட்டிஸ் , சிப்லா , லூபின் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏற்கனவே அமெரிக்காவில் தங்கள் உற்பத்தி ஆலைகளை வைத்திருப்பதால், அவற்றின் தாக்கம் ஓரளவுக்குக் குறைவாக இருக்கும் என தெரிகிறது. இந்த 100% வரி, பிரதானமாக காப்புரிமை பெற்ற மருந்துகளுக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை இந்தியாவின் பலமான ஜெனரிக் மருந்துக்கு வரி விதித்தால் அது மிகப்பெரிய பாதிப்பை இந்தியாவிற்கு ஏற்படுத்தும். நல்லவேளையாக அப்படி டிரம்ப் அறிவிக்கவில்லை.. அதேநேரம் இதன் தாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும் போது, நேற்று சமூக ஊடகங்களில் மருந்து மற்றும் பிற தயாரிப்புகளுக்கு புதிய வரிகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதை பார்த்தோம். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சகமும், துறையும் இந்த விஷயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து, ஆய்வு செய்து வருகின்றன.

இந்த புதிய வரி விதிப்பு, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் காப்புரிமை பெற்ற பிராண்டட் மருந்து பொருட்கள் தயாரிப்புகளுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜெனரிக்களுக்கு பொருந்தாது. இந்தியா பெரும்பாலும் ஜெனரிக் தயாரிப்புகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியா அமெரிக்காவிற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருந்தை ஏற்றுமதி செய்கிறது. எனவே இந்த புதிய உத்தரவால் இந்தியா பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+