கரூரில் 12 மணிக்கு கூட்டம் கூடும்னுதான் சொன்னோம்! விஜய் வருவாருனு சொல்லலை! சிபிஐயிடம் தவெக விளக்கம்
டெல்லி: கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு மதியம் 12 மணிக்கெல்லாம் நிறைய கூட்டம் வரும் என்றுதான் சொன்னோமே தவிர, அந்த நேரத்திற்கு விஜய் வருவார் என நாங்கள் சொல்லவில்லை என டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான தவெக நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தேர்தல் பிரச்சாரம் நடந்தது. அதில் விஜய் கலந்து கொண்டார். அன்றைய தினம் காலையில் நாமக்கல்லிலும் பிறகு கரூரிலும் அவர் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாமக்கல் வருவதற்கே விஜய்க்கு தாமதமாகிவிட்டது. இதனால் கரூருக்கு மதியம் 12 மணிக்கு வருவதாக சொன்ன விஜய், இரவு 7 மணிக்குத்தான் வந்தார். அப்போது அவரை பார்க்க கூட்டத்தினர் முண்டியடித்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்த விசாரணையில் கரூரில் மக்கள் காலை 12 மணி முதலே வெயிலிலும் தண்ணீர், உணவின்றி காத்திருந்ததால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததில் மற்றவர்கள் மிதித்துவிட்டதால் மூச்சுத்திணறி இறந்துவிட்டார்கள் என சொல்லப்பட்டது.
மேலும் விஜய் வருவதற்கு முன்பு கூட்டத்தை விட்டு வெளியேற முயன்றவர்களை தவெகவினர், வெளியேற விடாமல், இதோ வருவார், அதே வருவார் என தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ நடத்தி வருகிறது. அந்த வகையில் கரூர் சம்பவம் குறித்து சிபிஐ, புஸ்ஸி ஆனந்த், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், ஆதவ் ஆர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு ஆஜராகினர்.
அவர்களிடம் 12 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டதாம். ஒரே ஹாலில் வைத்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் உணவு இடைவேளை கொடுக்கப்பட்டதாம். அவர்கள் கேட்டது போல் ரொட்டி, பிரியாணி உள்ளிட்ட உணவுகள் அந்த அலுவலக கேன்டீனில் வாங்கப்பட்டு 4 பேருக்கும் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விசாரணை குறித்து நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: எங்கள் 4 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்பேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளோம். கரூர் சம்பவத்திற்கு யார் காரணம் என்பது இந்த உலகத்துக்கே தெரியும். சிபிஐக்கு ஒத்துழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவர்களுக்கு தேவையான விளக்கங்களை ஆதாரத்துடன் கொடுத்துவிட்டோம்.
என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்பது குறித்து ஊடகங்கள் முன்பு சொல்வது நன்றாக இருக்காது என தெரிவித்தார். இந்த நிலையில் இன்று 2 ஆம் நாளும் 4 பேரிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது.
அப்போது சிபிஐ அதிகாரிகளிடம் ஆதவ், ஆனந்த், நிர்மல், மதியழகன் ஆகியோர் தரப்பு கூறியிருப்பதாவது: கரூர் உயிரிழப்புகளுக்கு திமுக அரசுதான் காரணம். கூட்டம் அதிகமாக இருப்பதால் தடுத்து நிறுத்தியிருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.
சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளே காரணம். கட்சித் தலைவர், நிர்வாகிகளின் வாகனங்களை வழி நடத்தியதே காவல்துறைதான். கரூருக்கு 12 மணி முதலே கூட்டம் வரும் என்றுதான் சொன்னோமே தவிர, விஜய் 12 மணிக்கு வருவார் என நாங்கள் சொல்லவில்லை என்றனர்.
தவெகவினரின் குற்றச்சாட்டுகளுக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் மறுத்தது. கரூர் கூட்ட நெரிசல் குறித்து வாக்கி டாக்கி மூலமாக தவெகவினருக்கு தெரியப்படுத்தப்பட்டது என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இன்று எத்தனை மணி நேரம் விசாரணை நடத்தப்படும் என தெரியவில்லை. இந்த நிலையில் விஜய்க்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
“உண்மை வெளியானால் விஜய் ஆட்டம் முடியும்”! ரசிகர்களே வெறுப்பார்கள்.. கொளுத்தி போட்ட மோகன் ஜி -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள்












Click it and Unblock the Notifications