பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் பெற்றோரை அடையாளப்படுத்திய ராகுலின் ட்வீட் நீக்கம்
டெல்லி: டெல்லியில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளங்களை வெளியிட்டதாக ட்விட்டர் நிர்வாகம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் ட்விட்டை நீக்கியது.
இந்த ட்வீட்டை நீக்குமாறு ட்விட்டர் நிர்வாகத்திற்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் அளித்து பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்படுத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சிறுமியின் உடல் தகனம்
மேலும் அந்த சிறுமியின் உடல் கட்டாயப்படுத்தி தகனமும் செய்யப்பட்டுவிட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

தாய், தந்தை
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தையை காருக்குள் அமர வைத்து ராகுல் ஆறுதல் கூறினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் நான் இறந்த சிறுமியின் குடும்பத்தாருடன் பேசினேன். அவர்கள் நீதியைதான் கேட்கிறார்கள். நீதி வழங்கப்படவில்லை. அவர்களுக்காக நான் துணை நிற்பேன் என தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தி ட்விட்டர் பக்கம்
சிறுமியின் பெற்றோரை சந்தித்த ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சிறுமியின் பெற்றோரின் கண்ணீர் ஒன்றைதான் உணர்த்துகிறது. அவர்களின் மகளுக்கு நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதியை தேடிய பயணத்தில்தான் அவர்களுடன் இருப்பேன் என பதிவிட்டிருந்தார்.

ட்வீட் நீக்கம்
இந்த நிலையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்களை அடையாளப்படுத்தியதாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் டிவிட்டர் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. இந்த ட்வீட் போக்சோ சட்டத்தின் விதிகளை மீறியது என்பதால் அதை நீக்குமாறும் அதுகுறித்து அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் அந்த ட்வீட்டை நீக்கியது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications