அரபிக் கடலில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. 2 பைலட்கள் மாயம்! முழு வீச்சில் தேடும் பணி
டெல்லி: அரபிக்கடலில் இந்திய கொடியுடன் சென்ற கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்ட நிலையில், மீட்பு பணிக்காக சென்ற இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியுள்ளது. ஹெலிகாப்டரின் பைலட்கள் இருவர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரபிக் கடலில் இந்திய கொடியுடன் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, உதவி கேட்ட கப்பலை மீட்க இந்திய கடலோர காவல் படையில் இருந்து வீரர்கள் விரைந்துள்ளனர். இரண்டு ஹெலிகாப்டர்கள், 4 கப்பல்கள் சென்றன.

போர்பந்தர் கடல் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கப்பலை மீட்க சென்ற இரண்டு ஹெலிகாப்டரில் ஒரு ஹெலிகாப்டர் அவசரமாக அரபிக்கடலில் தரையிறங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் இரண்டு பைலட்கள் உள்பட 4 பேர் இருந்துள்ளனர். ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கிய நிலையில், இரண்டு பைலட்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கி வீரர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மற்றொரு நீர்மூழ்கி வீரர் பத்திரமாக மீட்கப்பட்டார். மீதமுள்ள இரண்டு பைலட்கள் மற்றும் ஒரு நீர் மூழ்கி வீரரை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய கடற்படைக்கு சொந்தமான அட்வான்ஸ்டு இலகு ரக ஹெலிகாப்டர், அண்மையில் குஜராத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையின் போது 67 பேரை பத்திரமாக மீட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று நள்ளிரவு போர்பந்தர் துறைமுகத்தில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் இருந்து அவசர அழைப்பு வந்துள்ளது. இந்திய கொடியுடன் சென்ற அந்த டேங்கர் கப்பலில் இருந்த சிப்பந்தி ஒருவர் படுகாயம் அடைந்ததால் அவசரமாக மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது. இதனால், கப்பல் அவசர உதவி கேட்டுள்ளது. இதையடுத்து, ஹெலிகாப்டரில் இந்திய கடலோர காவல் படை சென்ற போது இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications