இரட்டை இலை சின்னம்.. டிடிவி தினகரன் கோரிக்கை நிராகரிப்பு.. அவசர வழக்காக விசாரிக்க முடியாது!
இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்கு அளிக்கப்பட்டதற்கு எதிரான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு மனு மார்ச் 15ம் தேதி விசாரணை செய்யப்பட உள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்கு அளிக்கப்பட்டதற்கு எதிரான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு மனு மார்ச் 15ம் தேதி விசாரணை செய்யப்பட உள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பின் அதிமுகவில் வரிசையாக பல பிரச்சனை வந்தது கடைசியாக இரண்டாக உடைந்தது. இரண்டாக உடைந்த அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா - டிடிவி தினகரன் தரப்பு தனியாக வந்தது.

இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதனால் தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை முடக்கியது.
அதன்பின் 2017 நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு டெல்லி ஹைகோர்ட் சென்றது.
இந்த வழக்கில் இரண்டு வாரம் முன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா திங்க்ரா செகல் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கினார். இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்குத்தான் சொந்தம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
Also Read | இறங்கி வந்த தேமுதிக.. மரத்தில் ஏறிய தமாகா.. அதிமுக கூட்டணியில் ஒரே தமாஷ்தான்!
இரட்டை இலை சின்னத்தை அதிமுக பயன்படுத்துவது சரிதான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் கோரிக்கை வைத்தார்.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் அதிமுக கட்சிக்கு அளிக்கப்பட்டதற்கு எதிரான டிடிவி தினகரனின் மேல்முறையீட்டு மனு மார்ச் 15ம் தேதி விசாரணை செய்யப்பட உள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து இருக்கிறார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications