கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திரும்ப தரும் பிரிட்டன்? அந்நாட்டு அமைச்சர் மிக முக்கிய தகவல்
டெல்லி: உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான கோஹினூர் வைரம் முதலில் இந்தியாவில் இருந்தது. ஆனால், அதைப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். அதை மீண்டும் இந்தியா எடுத்து வர வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கிடையே இது தொடர்பாகப் பிரிட்டனின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் லிசா நந்தி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்று கோஹினூர் வைரம். இதன் அழகு பார்க்கும் அனைவரையும் கட்டிப்போட்டு விடும். இந்த கோஹினூர் வைரம் ஆந்திர மாநிலம் குண்டூரில் 11- 13ம் நூற்றாண்டு காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்றான 105.6 காரட் எடையுள்ள இந்த கோஹினூர் வைரம், பல மன்னர்களின் கைகளுக்குச் சென்று கடைசியில் மகாராஜா ரஞ்சித் சிங் வசம் வந்தது.

கோஹினூர் வைரம்
இருப்பினும், 1840களில் இந்த வைரம் கிழக்கிந்திய கம்பெனிக்கு சென்றது. பிறகு அங்கிருந்து பிரிட்டன் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாகக் கிழக்கு இந்திய கம்பெனிக்கு கட்டுப்பாட்டில் பஞ்சாப் இணைக்கப்பட்ட பிறகு, இந்த வைரம் ராணி விக்டோரியாவுக்கு வழங்கப்பட்டது. இது பிரிட்டிஷ் காலனித்துவக் கொள்ளை மற்றும் ஏகாதிபத்தியத்தின் அடையாளமாக உள்ளது.
அதேநேரம் இந்தியாவுக்குச் சொந்தமான இந்த வைரத்தை மீண்டும் இந்தியாவிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது. இதற்கிடையே அக்காரப்பூர்வப் பயணமாக டெல்லி வந்துள்ள பிரிட்டனின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத்துறை செயலாளர் லிசா நந்தி இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
அமைச்சர் கருத்து
கோஹினூர் வைரம் உட்பட பல வரலாற்றுக் கலைப் பொருட்களின் பகிரப்பட்ட ஆக்செஸ் மற்றும் அதன் பலன்களை இரு தரப்பும் அடைவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள மக்களும் கலாச்சாரக் கலைப் பொருட்களிலிருந்து பயனடையவும் அவற்றை அணுகவும் முடியும் என்பதை உறுதி செய்ய இந்த விவகாரத்தில் இரு தரப்பும் நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்திய அமைச்சரிடம் இது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்
படைப்பு துறைகளில் இங்கிலாந்து மற்றும் இந்தியா சிறந்து விளங்குகிறது. திரைப்படம், ஃபேஷன், தொலைக்காட்சி, இசை, விளையாட்டு பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறோம்.. உலக நாடுகளுக்கு இந்தத் துறைகளில் நாம் பங்களித்து வருகிறோம். கலைப் பொருட்களிலும் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மக்கள் உண்மையில் பயனடைவதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
திரைப்படம், ஃபேஷன் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மரும் இதில் உடன்படுகிறார். இந்தியா இங்கிலாந்து இணைந்து பணியாற்றினால் பல சாதனைகளைப் படைக்க முடியும். அதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாகவே இருக்கிறது" என்றார்.
பஹல்காம் தாக்குதல்
தொடர்ந்து பஹல்காம் தாக்குதல் குறித்துப் பேசிய அவர், "பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகப் பிரிட்டன் பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் குறிப்பிட்டார். இந்தக் கொடூரமான தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை நாங்கள் எதிர்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் எப்போதும் நிற்போம். இந்தியாவுடனான எங்கள் உறவு மிகவும் ஆழமானது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications