Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யார் இந்த உமர் காலித்? எதற்காக UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) முன்னாள் மாணவர் தலைவர்தான் இந்த உமர் காலித். கடந்த 2020ம் ஆண்டு டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளாக தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார். தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக மாணவர்கள் இந்த போராட்டங்களில் தங்களை இணைத்துக்கொண்டனர். அப்படித்தான் உமர் காலித்தும் அவரது நண்பர்களும் இந்த போராட்டங்களில் பங்கேற்றனர்.

Umar Khalid Delhi Riots

டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி இந்த சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதனை உமர் காலித் மற்றும் அவரது நண்பர்கள் தலைமையேற்று நடத்தினர். இந்த நேரத்தல்தான் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து உமர் காலித் மற்றும் அவரது நண்பர்கள் கலவரத்திற்கு காரணம் என்று கூறி சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் அதாவது உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக நாட்கள் கடந்துக்கொண்டே இருந்தன. வருடம் 5 ஆனது. இன்னமும் கலவரத்திற்கு காரணம் உமர் காலித்தும் அவரது நண்பர்களும்தான் என்பதை டெல்லி காவல்துறை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் சிலர் ஏற்கெனவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், இவர்கள் மட்டும் இன்னும் விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர். எனவே தங்களுக்கும் ஜாமீன் வழக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

மத்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பலமுறை ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. "இந்த கலவரம் திட்டமிடப்பட்ட சதி நாட்டுக்கு எதிராக நீங்கள் ஏதாவது செய்தால் விடுவிக்கப்படும் வரை நீங்கள் சிறையில் தான் இருக்க வேண்டும் அதுதான் நல்லதும் கூட. இந்தியாவுக்கு டிரம்ப் வந்திருந்தபோது கலவரத்திற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதன் நோக்கம் சர்வதேச அளவில் இந்தியாவை அவமானப்படுத்துவதான்" என அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறினார்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த உமர் காலித் மற்றும் அவரது நண்பர்கள், "டெல்லி போலீஸ் குற்றம் சாட்டுவது போல நாங்கள் எந்த கலவரத்திலும் ஈடுபடவில்லை. எங்களிடமிருந்து குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரங்களும் மீட்கப்படவில்லை. எங்களுடைய வாட்ஸ்அப் மெசேஜ்கள் இந்த கலவரத்துக்கு காரணம் கிடையாது" என்று உமர் காலித் தரப்பு மறுத்து வருகிறது. இந்நிலையில் காலித்துக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. சகோதரி திருமணத்தில் கலந்துகொள்வதற்காக, டிசம்பர் 16 முதல் 29 வரை அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+