டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூணு நாளா கடுமையான பல் வலி... ஆனா ஜெயில்ல ட்ரீட்மென்ட் தரல .. நீதிமன்றத்தில் உமர் காலித் புகார்!

Google Oneindia Tamil News

புதுடெல்லி: 3 நாட்கள் கடுமையான பல் வலியால் வேதனையில் தவிப்பதாகவும், ஆனால் சிறை அதிகாரிகள் சிசிக்சை அளிக்க மறுப்பதாகவும் ஜேஎன்யு மாணவர் உமர் காலித் நேற்று நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

அவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். உமர்காலித் டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.

Umar Khalid says no treatment for toothache given in jail

டெல்லி கலவர வழக்கு தொடர்பாக ஜேஎன்யு முன்னாள் மாணவர் உமர்காலித் கடந்த அக்டோபர் 1ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் டெல்லி நீதிமன்ற தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தினேஷ் குமார் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, உமர் காலித் நீதிபதியிடம் சிறை அதிகாரிகள் மேல் அடுக்கடுக்கான குற்றம் சாட்டினார். தனக்கு கடந்த மூன்று நாட்களாக கடுமையான பல் வலி இருந்து வருவதாகவும், ஆனால் சிறையில் அதற்கு சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். புதன்கிழமை சிறைக்கு வர வேண்டிய பல் மருத்துவர் வரவில்லை எனவும் தான் கடுமையான வழியை அனுபவித்து வருவதாகவும் நீதிபதியிடம் உமர் காலித் கூறினார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: சாலைகளை மூடியது யார் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி டெல்லி விவசாயிகள் போராட்டம்: சாலைகளை மூடியது யார் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

இதனை கேட்ட நீதிபதி, உமர் காலித்துக்கு சிறையில் உடனடியாக பல் மரத்துவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும் .இதில்காலதாமதம் ஏற்பட்டால், சிறைக்கு வெளியில் உள்ள பல் மருத்துவரிடம் அழைத்துச்சென்று சிறை விதிகளின்படி சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த சிகிச்சை தொடர்பான அறிக்கைகளை சிறை அதிகாரிகள் 2 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

English summary
JNU student Omar Khalid was charged in court yesterday with suffering from severe toothache for 3 days but prison officials refused to provide treatment
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X