Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெகஜ்ஜால ப்ராடு நித்தியானந்தா-கைலாசாவுக்கு அங்கீகாரமா? ஐ.நா.வை வாயை திறக்க வைத்த கில்லாடி!

நாட்டை விட்டு தப்பி ஓடிய பாலியல் குற்றவாளி நித்தியானந்தா, ஐநா தொடர்பான கூட்டங்களில் பிரதிநிதியை பங்கேற்க வைத்து சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா தாம் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா என்ற நாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்ற கட்டுக்கதைகளை ஐக்கிய நாடுகள் சபை திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

ஒரு சுதந்திர நாடு என்பது கில்லாடி கிரிமினல் நித்தியானந்தாக்களுக்கு எளிதானதாக இருக்கலாம். ஒரு நாட்டை உருவாக்குவதற்காக போராடி, இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் பச்சை படுகொலை செய்யப்பட்ட வரலாறு 13 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நடந்தது என்பது தப்பி ஓடிய பாலியல் குற்றவாளி நித்தியானந்தாவுக்கு நினைவில் இல்லாமல் போகலாம்.

UN Rejects Rape accused Nithyananda gangs fictional country Kailasa

இந்தியாவின் சட்டத்தின் பிடியில் இருந்து திருட்டுத்தனமாக தப்பி ஓடிவிட்ட நித்தியானந்தா, எங்கோ ஏதோ ஒரு மூலையில் ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளார். இத்தனைக்கும் அந்த நாடு எந்த திசையில் இருக்கிறது என்பதை கூட அறிவிக்க முடியாத அளவுக்கு ஒரு பதுங்கு பிராடு ஆசாமியாகத்தான் நித்தியானந்தா இருக்கிறார்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்புகள்- என்ஜிஓக்கள் பங்கேற்கும் கூட்டங்களில் யாரையோ பிடித்து எப்படியோ தமது சீஷ்யைகளை அனுப்பி பேச வைத்து, படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார் நித்தியானந்தா. அதாவது இப்படி என்ஜிஓக்கள் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு என்னமோ, ஐநா சபையே அங்கீகரித்துவிட்டதாக வழக்கம் போல கட்டுக்கதைகளை கொட்டி வருகிறார் நித்தியானந்தா.

இந்த முறை ஐநா தொடர்பான என்ஜிஓக்கள் கூட்டத்தில் பேசிய நித்தியானந்தாவின் சிஷ்யையும் ஐநாவுக்கான நிரந்தர தூதர் என அறிவிக்கப்பட்டவருமான விஜயப்ரியா நித்தியானந்தா என்பவர், இந்தியாவில் நித்தியானந்தா துன்புறுத்தப்பட்டார்; அவர் நாடு கடத்தப்பட்டுவிட்டார் என்றெல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுள்ளார். சாமியார் என்ற போர்வையில் நித்தியானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நடத்திய காம களியாட்டங்களை இந்த உலகமே பார்த்து அதிர்ந்தது. சாமியார் என்ற போர்வையில் பெண் சீடர்களை பலாத்காரம் செய்ததாலேயே நித்தியானந்தாவை நாட்டின் நீதிமன்றங்கள் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது. இதனால்தான் இந்தியாவை விட்டு தப்பி ஓடி எங்கோ ஒரு மூலையில் பதுங்கி கொண்டிருக்கிறார் நித்தியானந்தா.

இப்போது ஐநா சபை கைலாசாவை அங்கீகரித்துவிட்டதாக புரூடாக்களை விட்டு வருவதால் வேறு வழியே இல்லாமல் இது தொடர்பாக ஐநாவும் விளக்கம் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இது தொடர்பாக ஐநா சபை தரப்பில் கூறுகையில், என்ஜிஓக்கள் போர்வையில்தான் நித்தியானந்தா கோஷ்டியினர் பங்கேற்றனர். பொருளாதார, சமூக கலாசார உரிமைகளுக்கான கூட்டத்தில் தொடர்பே இல்லாமல் நித்தியானந்தா பிரதிநிதி என்பவர் பேசியதை நிராகரித்துவிட்டோம் என கூறியுள்ளது.

ஜெகஜால கில்லாடிதான் நித்தி!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+