பொருளாதாரம் மீண்டும் தேறுவதில் நிச்சயமற்ற நிலை- மத்திய தலைமை நிதித்துறை ஆலோசகர்
டெல்லி: நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுமா? என்பதில் நிச்சயமற்ற நிலை இருக்கிறது என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதார மீட்சி குறித்து தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளதாவது:
லாக்டவுனை நாம் அமல்படுத்தியபோது ஏப்ரல் தொடக்கத்தில் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி என்பது 1.5-2% இருக்கலாம் என நிதி அமைச்சகம் மதிப்பிட்டது. பொருளாதார வளர்ச்சி மீண்டு எழுவதன் அடிப்படையில் இருக்கிறது.

நடப்பாண்டின் 2-வது பகுதியில் அல்லது அடுத்த ஆண்டில் பொருளாதாரம் மீட்சி அடையுமா என்பது குறித்து நிச்சயமற்ற நிலைதான் இருக்கிறது. அனைத்துவித சூழ்நிலைகளையும் பரிசீலித்து பொருளாதார நிலைமை குறித்து மதிப்பிட்டு வருகிறோம்.
பொருளாதார மீட்சி ஏற்படாமல் போனால் இந்தியாவின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி என்பது நடப்பாண்டில் குறைவாகவே இருக்கும். 2-வது ஆண்டில் பொருளாதார மீட்சி இருந்தாலும் அது குறிப்பிட்ட அளவானதாகத்தான் இருக்கும்.
தற்போது மத்திய அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த நடவடிக்கைகள் அடுத்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியவைவையாக இருக்கும். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications