அதெப்படி ஜீரோ பட்ஜெட் என சொல்லலாம்? பொறுப்பற்ற விமர்சனம்-ராகுல் காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
டெல்லி: மத்திய பட்ஜெட்டை ஜீரோ பட்ஜெட் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பது பொறுப்பற்ற விமர்சனம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இப்பட்ஜெட் மக்கள் நலனை மையமாகக் கொண்டது என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
இப்பட்ஜெட் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதில், மத்திய அரசின் பட்ஜெட் ஜீரோ பட்ஜெட்தான். மாத ஊதியம் பெறுபவர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு எந்த சலுகையுமே அளிக்கப்படவில்லையே என கூறியிருந்தார் ராகுல் காந்தி.

வரி உயர்வு இல்லை
இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் சந்தியாளர்களை சந்தித்தார் நிர்மலா சீதாராமன். இச்சந்திப்பில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை. கடந்த ஆண்டு கடைபிடிக்கப்பட்ட அதே நடைமுறைதான் இந்த பட்ஜெட்டிலும் பின்பற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தைப் பயன்படுத்தி சிங்கிள் பைசா கூட வருமான பார்க்க மத்திய அரசு விரும்பவில்லை.

கொரோனா பாதிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு உதவி வருகிறது. கொரோனாகாலத்தில் சுற்றுலா, உணவு சேவை துறைகள் கடும் சிக்கல்களை எதிர்கொண்டன. அதனால் இந்த துறைகளுக்கு அவசர கால கடனுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் கருத்துக்கு எதிர்ப்பு
பட்ஜெட் தொடர்பான விமர்சனங்களை ஏற்கிறோம். இந்த பட்ஜெட்டை ஜீரோ பட்ஜெட் என ராகுல் கூறியிருப்பது பொறுப்பற்ற விமர்சமனம். பட்ஜெட்டில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை ராகுல் காந்தி தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.
Recommended Video

ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்
கிரிப்டோ கரன்சி மூலமான எந்த பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டாலும் 30% வரி விதிக்கப்படும். ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துவது டிஜிட்டல் ரூபாய். பிட்காயின் போன்றவை அல்ல டிஜிட்டல் ரூபாய். எல்.ஐ.சி-யின் பங்குகள் தற்போது மதிப்பிடப்பட்டு வருகின்றன. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications