டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நெடுஞ்சாலைத்துறைக்கு பூஸ்ட்.. பட்ஜெட்டில் ரூ.1.62 லட்சம் கோடி.. பின்னணியில் சூப்பர் பிளான்! அடடே!

மத்திய பட்ஜெட்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.62 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைத்துக்கு பூஸ்ட் வழங்கும் வகையில் ரூ.1.62 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த முறையை விட அதிகமாகும். இந்நிலையில் தான் இதன் பின்னணியில் உள்ள முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது.

Union Budget 2023: Finance Minister Nirmala Sitharaman increases allocation to NHAI to Rs 1.62 Lakh Crore

2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் புதிய அறிவிப்புகள், திட்டங்கள் வெளியிடப்பட்டன.

புதிய வருமான வரி முறையில் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில் அதனை ரூ.7 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் தனிநபர் ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சமாக இருந்தால் அவர்கள் தங்களின் செலவீனங்கள் உள்ளிட்ட ஆவணங்களை முழுமையாக சமர்ப்பித்தால் மட்டுமே போதும்.

மேலும் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு ரூ.4 லட்சத்து 76 ஆயிரத்து 104 கோடி, வேளாண்மை துறைக்கு ரூ.1,15,531 கோடி, உணவு மற்றும் பொது வினியோகத்துறைக்கு ரூ.2,05,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ரூ.1.62 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்படும் விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இதனால் நெடுஞ்சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் ரூ.1.42 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1.62 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் சம்பளம், பிரதமர் அலுவலக செலவுகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? அமைச்சர்கள் சம்பளம், பிரதமர் அலுவலக செலவுகளுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

மேலும் 2023-24 மத்திய பட்ஜெட்டில் நெடுஞ்சாலை துறைக்கு ரூ.2.70 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ரூ.1.99 கோடியாக இருந்த நிலையில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றம் தேசிய நெடுஞ்சாலைகள் ம்றறும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் ஆகியவை நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Union Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget today. In this, funds of Rs.1.62 lakh crore have been allocated to provide a boost to the National Highways Commission. This is more than the last method. In this case, the main thing behind this has been revealed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X