வங்கதேசத்தை முடக்கும் நிர்மலா சீதாராமன்? ஜவுளித்துறைக்கு அடித்த ஜாக்பாட்.. பட்ஜெட்டில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வரும் வங்கதேசத்தை மொத்தமாக முடக்கும் வகையில் ஜவுளித்துறைக்கு பல சலுகைகளுடன் கூடிய ஜாக்பாட்டான அறிவிப்புகள் இன்றைய மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.

2025-26ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. . காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

budget 2025 union budget 2025 nirmala sitharaman 2025 2025

இந்த பட்ஜெட்டில் வருமான வரி குறைப்பு, வெவ்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி குறிப்பாக ஜவுளித்துறையில் பல சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் வங்கதேசம் தான். அண்டை நாடான வங்கதேசம் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தலைமையிலான அரசு நம்நாட்டை சீண்டி வருகிறது. அதோடு வங்கதேசத்தில் தற்போது பொருளாதாரம் வளர்ச்சியின்றி மோசமான நிலையில் உள்ளது. அதோடு வங்கதேச பொருளாதாரத்தில் மிகவும் முக்கிய பங்காற்றி வரும் ஜவுளித்துறை பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

வங்கதேச நாட்டின் பொருளாதாரம் என்பது ஜவுளித்துறையை நம்பித்தான் உள்ளது. அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 சதவீத பங்கை ஜவுளித்துறை தான் பூர்த்தி செய்கிறது. இதில் நம் நாட்டின் பங்கு முக்கியமானதாகும். நம் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தியில் 35 சதவீதம் வங்கதேசத்துக்கு தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பருத்தி ஏற்றுமதியால் தான் வங்கதேசம் ஜவுளித்துறையில் ஜொலிக்கிறது. இருப்பினும் கூட வங்கதேசத்தில் தற்போது நீடிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இல்லாதது உள்ளிட்டவற்றால் ஜவுளித்துறை பாதிப்பை சந்திக்க தொடங்கி உள்ளது.

இதனால் வங்கதேசத்துக்கு பதில் பிற நாடுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் நாட தொடங்கி உள்ளன. இதனை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த பட்ஜெட்டில் நம் நாட்டின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறைக்கு கூடுதல் நிதி, ஊக்கத்தொகை, வரிச்சலுகை உள்ளிட்டவை வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதன்படி பட்ஜெட்டில் ஜவுளித்துறை அமைச்சகத்துக்கு மொத்தமாக ஜவுளித்துறைக்கு ரூ.5,272 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-25ம் ஆண்டில் ஜவுளித்துறைக்கு 4,417.03 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அதனை விட அதிக நிதி என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில் ரூ.635 கோடி என்பது டெக்னாலஜியை மேம்படுத்தும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது. இதனால் நம் நாட்டில் ஜவுளித்துறையை மேம்படுத்தும் நோக்கில் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு என்பது வெளியிடப்பட்டுள்ளது. பிற நிதி விவரங்கள் எந்த மாதிரியான திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி விரைவில் அறிவிப்பு என்பது வெளியாகலாம்.

மேலும் பருத்தி விவசாயிகளுக்கு என்று பிரத்யேகமாக திட்டம் ஒன்று அறுிவிக்கப்பட்டுள்ளது. பருத்தி உற்பத்திக்கான மிஷன் (Mission for Contton Productivity) என்ற பெயரில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம்என்பது அடுத்த 5 ஆண்டுகளில் பருத்து உற்பத்தி திறனை அதிகரிக்கும். அதோடு பருத்தி விவசாயிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

ஜவுளித்துறைக்கான 5F தொலைநோக்கு பார்வையுடன் இது அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஜவுளித்துறைக்கு புத்துயிர் அளிக்கவும், தரமான பருத்தி உற்பத்தியும் இது உதவும் என்று நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் நம் நாட்டில் ஜவுளித்துறையை வளர்த்தெடுக்கும் என்று மத்திய அரசு நம்புகிறது. இது வங்கதேசத்தின் ஜவுளித்துறையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+