வீடு வாங்வோருக்கு பச்சைக் கொடி.. இன்று பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு! ரெடி ஆகுங்க மக்களே!
டெல்லி: மத்திய பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த ஆட்சிக் காலத்தில் முதலாவது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இதில் பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பெருகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில் வீடு வாங்குவோருக்கு வரி சலுகைகள் அளிக்கப்படும் எனவும், வீட்டுக் கடனுக்கான வட்டி விலக்கும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குவது வழக்கம்.

அந்த வகையில் பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் குழுக் கூட்டத்தில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
இந்த நிலையில், மத்திய அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை தொடர்ந்து ஐந்து முறை முழுமையான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். 2024 மக்களவைத் தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து ஜூலை மாதம் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இதை அடுத்து பட்ஜெட்டை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கும் இந்தியர்களும் ஆர்வத்தோடு எதிர்நோக்கி வருகின்றனர். இந்த பட்ஜெட் தாக்கல் நாடாளுமன்ற அலுவல்களை ஒளிபரப்பு செய்யும் சன்சத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஏற்கனவே 7 லட்சம் ஆக இருக்கும் தனி நபர் வருமான வரி விலக்கு 10 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், மீதான கலால் வரி, மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் கருவிகளுக்கான இறக்குமதி வரி, தங்கம், வெள்ளி, வைரம் இறக்குமதி குறைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு நிதி உதவி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 6000 வழங்கப்பட்டு வருகிறது. இது 12000 ஆக அதிகரிக்கப்படலாம் என கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள். மேலும் அடல் ஓய்வூதிய திட்டத்தில் அதிகபட்சமாக ஓய்வூதியம் 5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ள ஒரு நிலையில் அது பத்தாயிரம் ஆக உயர்த்தப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பெரு நகரங்களில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் ரியல் எஸ்டேட் துறை வரி விதிப்பின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெரு நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது பெருநகரங்களில் 45 லட்சம் ரூபாய் வரை வீடுகள் வாங்குபவர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டு ஒரு நிலையில் தற்போது அது 70 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. சிறிய நகரங்களில் 5 லட்சம் வரை வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுக் கடனுக்காக வட்டிக்கு ஒரு நிதியாண்டில் 2 லட்சம் வரி விலக்கு அளிக்கப்படும் நிலையில் அது 5 லட்சமாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் துறை எழுச்சி பெறும் என்கின்றனர் அந்த துறையை சார்ந்த நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications