Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் வருதுல்ல தமிழ்நாட்டுக்கு குறி..திட்டங்களை அள்ளி வீசிய நிர்மலா சீதாராமன்! குறுக்கே வந்த கேரளா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பட்ஜெட் 2026-27ஐ தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மும்பை - புனே, புனே- ஹைதராபாத், ஹைதரபாத் - சென்னை, டெல்லி வாரணாசி, வாரணாசி சிலிகுரி உள்பட 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது என அறிவித்தார். அதிவிரைவு ரயில் சேவை அறிவித்தபோது கேரளாவிற்கு எங்கே என உறுப்பினர்கள் சிலர் குரல் எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவருடைய தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட் ஆகும். பட்ஜெட் தாக்கல் நிகழ்வு, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் நிகழ்வாகும் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பில், குடியரசுத் தலைவர் தன் வாழ்த்துகளை தெரிவித்து, தயிரில் சர்க்கரை கலந்த இனிப்பை வழங்கினார்.

budget 2026 union budget 2026

பட்ஜெட் தாக்கல் நிகழ்வுக்கு முன்னர், நிர்மலா சீதாராமன் தனது குழுவுடன் நிதியமைச்சகத்தின் வெளியே புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் வளர்ச்சி, தொழில், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு ஆகிய துறைகள் முக்கியமாக கவனம் பெறுகின்றன.

குறிப்பாக, ஜவுளி துறையில் முன்னேற்றம் காண புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. "மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம்" என்ற பெயரில் நான்கு மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளதாகவும், ஜவுளி துறைக்கு ஆதரவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், அதிவேக ரயில் திட்டம் 7 முக்கிய வழித்தடங்களில் நடைமுறைக்கு வருகிறது. இதில் மும்பை-புனே, புனே-ஹைதராபாத், ஹைதராபாத்-சென்னை, டெல்லி-வாரணாசி, வாரணாசி-சிலிகுரி உள்ளிட்ட வழித்தடங்கள் அடங்கும். இந்த அதிவிரைவு ரயில் சேவையை அறிவிக்கும் போது, கேரளா மாநிலத்துக்கு இடம் ஒதுக்கப்படுவது குறித்து சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததால், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் வளர்ச்சி இலக்குகள், முதலீடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில் நுண்ணறிவுத் திட்டங்களை குறிப்பிட்டார். குறிப்பாக, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான முதலீட்டு வரம்பு 5% முதல் 10% வரை உயர்த்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் வெளிநாட்டிலிருந்து வரவிருக்கும் முதலீடுகள் ஊக்கமடையும் எதிர்பார்ப்பு உள்ளது.

2026-27 பட்ஜெட்டில் தொழில் துறைகளுக்கு நிவாரணங்கள், தொழிலாளர்களுக்கான திட்டங்கள், விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் மலிவு வீட்டு திட்டங்கள் ஆகியவையும் அடங்கும். பொருளாதார வல்லுநர்கள் இதனை வேகமான வளர்ச்சிக்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை ஆகும் பட்ஜெட் என மதிப்பீடு செய்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+