Union Budget: இன்று பட்ஜெட் தாக்கல்.. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களுக்கு சிறப்பு கவனிப்பு இருக்குமா?
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்தியாவில் 27 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஞாயிற்றுக்கிழமையில் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இந்த மாநிலங்களுக்கு சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், வரும் நிதியாண்டிற்கான (2026 - 2027) பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் அன்றைய தினம் 2 அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதிமுர்மு உரையாற்றினார்.

மத்திய அரசின் பட்ஜெட் இன்று (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்திய வரலாற்றில் 2வது முறையாக ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்பு 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது, அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் மாலை 5 மணிக்குதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த நடைமுறையை பின்பற்றி 1998 ஆம் ஆண்டு வரை மாலை 5 மணிக்குதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த காலனிய ஆட்சியின் நடைமுறையை மாற்றி 1999 ஆம் ஆண்டு காலை 11 மணிக்கு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனால், 2024 ஜூலை, 2025 பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில் சட்டசபைதேர்தல் நடைபெற்ற பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. வேலைவாய்ப்பின்மை பிரச்சனையைக் கையாள்வதற்காக தனியார் துறையில் வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, இந்த 5 மாநில வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள், சலுகைகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள். அசாமில் பாஜக ஆட்சியும், புதுச்சேரியில் பாஜ கூட்டணி ஆட்சியும் நடக்கிறது. எனவே, இந்த 5 மாநில பேரவை தேர்தலை மையப்படுத்தி, மத்திய பட்ஜெட்டில் பல்வேறு சலுகை அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது இந்திய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், உணவு பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, இந்த பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி மற்றும் உணவு பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பான புதிய அறிவிப்புகள் இருக்குமா என்று மக்கள் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications