Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு ஊழியர்கள் காட்டில் பணமழை! 4% அகவிலைப்படி உயர்வு! ரயில்வே ஊழியர்களுக்கும் ஹேப்பி நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி, வீட்டு வாடகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் பண்டிகை காலம் நெருங்குவதால் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வரும் என பலர் காத்திருக்கிறார்கள்.

Union cabinet approves DA hike for central government employees

மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படியை அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நவராத்திரிக்கு பிறகு அகவிலைப்படி உயரும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இந்த முறை அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்தன. இதனால் தற்போது 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும் என தெரிகிறது. அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயரும். ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ 18 ஆயிரமாக இருந்தால் அவர் தற்போது 7,560 ரூபாய் அகவிலைப்படியாக பெறுகிறார்.

இதே அகவிலைப்படி உயர்ந்தால் கூடுதலாக ரூ 720 அதிகரித்து ரூ 8,280 ஊதியம் அதிகரிக்கும். அதே போல் ரூ 56900 அடிப்படை ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக அகவிலைப்படியில் ரூ 2276 கிடைக்கும். அகவிலைப்படி பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்த்தப்படுகிறது. பொதுவாக ஜனவரி, ஜூலை மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது.

அந்த வகையில் ஜூலை மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்ந்ததால் 42 சதவீதமாக இருந்தது. தற்போது மேலும் 4 சதவீதம் அகவிலைப்படி உயரும் என சொல்லப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் கணக்கீட்டுக்கான ஃபார்முலாவை மத்திய அரசு மாற்றியமைத்தது.

அதன்படி அகவிலைப்படி சதவீதம் = ((AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களுக்கு -115.76)/115.76)x100. மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: அகவிலைப்படி சதவீதம் = ((அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (AICPI) (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 3 மாதங்களுக்கு -126.33)/126.33)x100. இந்த அகவிலைப்படி உயர்வானது நவராத்திரிக்கும் தீபாவளிக்கும் இடையே அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் என 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். வழக்கமாக ஆண்டுக்கு இரு முறை விலைவாசி உயர்வின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: 2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான இந்திய ரயில்வேயில் தகுதியான ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸாக வழங்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 12 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். இந்த ஆண்டு ரூ 7000 வரை போனஸ் வழங்கப்படும் என தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+