ரூ.3,300 கோடி முதலீட்டில் குஜராத்தில் மேலும் ஒரு செமிகண்டக்டர் நிறுவனம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் கீழ் மேலும் ஒரு செமிக்கண்டக்டர் அலகுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் ரூ.3,300 கோடி முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் சில்லுகள் (சிப்புகள்) ஆகும்.
மத்திய அரசு இது தொடர்பாக தெரிவிக்கையில், துடிப்பான செமிகண்டக்டர் சூழலியல் அமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத்தின் சனந்த் நகரில் ஒரு செமிகண்டக்டர் அலகை நிறுவுவதற்கு கெய்ன்ஸ் செமிகான் தனியார் நிறுவனத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரூ.3,300 கோடி முதலீட்டில் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தத் தொழிற்சாலையின் உற்பத்தித் திறன் நாள் ஒன்றுக்கு 60 லட்சம் சில்லுகள் (சிப்புகள்) ஆகும்.
இந்தப் பிரிவில் உற்பத்தி செய்யப்படும் சில்லுகள் தொழில்துறை, வாகன, மின்சார வாகனங்கள், நுகர்வோர் மின்னணுவியல், தொலைத்தொடர்பு, மொபைல் போன்கள் போன்ற பிரிவுகளை உள்ளடக்கிய பல்வேறு வகையான பயன்பாடுகளைப் பூர்த்தி செய்யும்.
இந்தியாவில் செமிகண்டக்டர்கள் மற்றும் காட்சி உற்பத்தி சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் 21.12.2021 அன்று ரூ.76,000 கோடி மொத்த ஒதுக்கீட்டில் அறிவிக்கை செய்யப்பட்டது.
2023, ஜூன் மாதத்தில் குஜராத்தின் சனந்தில் ஒரு செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான முதல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
2024, பிப்ரவரி-யில், மேலும் மூன்று செமிகண்டக்டர் அலகுகள் அங்கீகரிக்கப்பட்டன. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் குஜராத்தின் தோலேராவில் ஒரு செமிகண்டக்டர் ஃபேப் மற்றும் அசாமின் மோரிகானில் ஒரு செமிகண்டக்டர் அலகை அமைக்கிறது. சிஜி பவர் குஜராத்தின் சனந்தில் ஒரு செமிகண்டக்டர் அலகை அமைக்கிறது
அனைத்து 4 செமிகண்டக்டர் அலகுகளின் கட்டுமானம் விரைவான வேகத்தில் முன்னேறி வருகிறது. அலகுகளுக்கு அருகில் ஒரு வலுவான செமிகண்டக்டர் சூழலியல் அமைப்பு உருவாகி வருகிறது. இந்த 4 அலகுகளும் கிட்டத்தட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும். இந்த அலகுகளின் ஒட்டுமொத்த திறன் ஒரு நாளைக்கு சுமார் 7 கோடி சில்லுகள் ஆகும் என தெரிவித்துள்ளது.
மேலும் மும்பை -இந்தூர் இடையே ரயில் இணைப்பை வழங்குவதற்கான திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications