Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

22 லட்சம் மாணவர்களுக்கு கடன் வழங்கும் "பிரதமரின் வித்யாலட்சுமி" திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் புதிய மத்திய அரசு திட்டமான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாட்டின் தலைசிறந்த 860 உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்- ஆண்டுக்கு 22 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் தேசிய கல்விக் கொள்கை- 2020-ன் கீழ் மற்றொரு முக்கிய முயற்சியாகும். இது அரசு, தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவி கிடைக்க வகை செய்யும் திட்டமாகும். இதன் கீழ், தலைசிறந்த உயர்கல்வி நிறுவனத்தில் (QHEIs) சேர்க்கை பெறும் எந்தவொரு மாணவரும் வங்கிகள், நிதி நிறுவனங்களிடமிருந்து பிணையம் இல்லாத, உத்தரவாதம் இல்லாத கடனைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். எளிய, வெளிப்படையான, மாணவர்களுக்கு ஏற்ற எளிய நடைமுறைகளின் மூலம் முற்றிலும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்படும் திட்டம் இதுவாகும்.

pm-vidyalaxmi scheme narendra modi

என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசைகளால் தீர்மானிக்கப்பட்டபடி, நாட்டின் தரமான உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி (கியூஎச்இஐ) நிறுவனங்களில் சேரும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். இத்திட்டம் கல்விக் கடன் மற்றும் வட்டி மானியம் உள்ளிட்ட பல பயன்களைக் கொண்டதாகும்.

உயர்கல்வித் துறை பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணையதளத்தில் மாணவர்கள் கல்விக் கடன், வட்டி மானியம் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்திய இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வியை இத்திட்டம் உறுதிசெய்யும் என்பதுடன், தொழில்நுட்ப / தொழில்முறை கல்வியில் உயர்கல்வியைத் தொடர தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்கும்.

இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாட்டின் திறமையான இளைஞர்கள் அனைவருக்கும் 21-ம் நூற்றாண்டின் உயர்கல்வி கிடைக்க இந்தத் திட்டம் உதவும் என்று கூறினார். 3,600 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன், இந்தத் திட்டம் உயர்கல்விக்கான தடைகளை நீக்கி, நாட்டின் இளைஞர் சக்தியை அவர்களின் கனவுகளை நனவாக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்தின் கீழ், அடமானம் இல்லாத மற்றும் உத்தரவாதம் இல்லாத கல்விக் கடன்கள் திறமையான மாணவர்களுக்கு உயர் கல்விக்கான அணுகலை அதிகரிக்கும் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் மாணவர்கள் கல்வியைத் தொடர்வதைத் தடுக்காது என்பதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+