மசோதாக்கள் தோல்வி.. டெல்லியில் இன்று அவசரமாக கூடும் மத்திய கேபினட் மீட்டிங்? ஆலோசிக்கபோவது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மசோதா தோல்வி அடைந்த சூழலில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று அவசரமாக கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மசோதா தோல்வி உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தை கூட்டிய மத்திய அரசு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்களை தாக்கல் செய்தது. இந்த மசோதாக்கள் மீதான விவாதம் முடிந்த நிலையில், நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால் மசோதாக்கள் தோல்வி அடைந்தன.

Union Cabinet Meeting To be held in Delhi Amid Bill Failed says sources

தொகுதி மறுவரையால் தென் மாநிலங்களுக்கு அநீதி ஏற்படும் என்றும் தற்போதைய எண்ணிக்கையை வைத்தே மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடாக இருந்தது.

ஆனால், எந்த ஒரு மாநிலத்திற்கும் பாகுபாடு காட்டப்படாது என்றும் 50 சதவீதம் தொகுதிகள் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று கூறின. எனினும், இதனை ஏற்க எதிர்க்கட்சிகள் மறுத்த நிலையில், நேற்று வாக்கெடுப்பில் மசோதா தோல்வி அடைந்தது. இதையடுத்து ஏனைய மசோதாக்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது.

மசோதா தோல்வி அடைந்த சூழலில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று அவசரமாக கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் மசோதா தோல்வி உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும், இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+