மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்.. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
டெல்லி: 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நடுத்தர வர்க்கத்தினர் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தாக்கல் செய்ய தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். கடும் அமளிக்கு நடுவே பட்ஜெட்டை உரையை நிர்மலா வாசிதார்.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார். பல்வேறு அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். வரும் 5 ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கென்று கூடுதலாக 75 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்பட வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, 2028 வரை இந்த திட்டம் செயல்படும். கல்விக்கான செய்ற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.












Click it and Unblock the Notifications