ரொம்ப வேகமா பரவுது.. கவனமா இருங்க.. அதிகரித்த இன்ஃப்ளூயன்சா "மர்ம" காய்ச்சல்.. மத்திய அரசு அறிவுரை
சாதரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
டெல்லி: ப்ளூ காய்ச்சல் நாடு முழுக்க தீவிரமாக பரவி வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் சார்பாக நாடு முழுக்க உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் முக்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருக்கும் மக்கள் இடையே திடீரென ப்ளூ காய்ச்சல் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் மக்கள் பலருக்கும் திடீரென காய்ச்சல் ஏற்படுவதும், கடுமையான உடல் வலி ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. இதன் அறிகுறிகள் என்னென்று இந்திய மருத்துவ கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

காய்ச்சல்
இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் சார்பாக நாடு முழுக்க உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் முக்கிய கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் ப்ளூ காய்ச்சல் குறித்த எச்சரிக்கை இதில் விடுக்கப்பட்டுள்ளது. அந்த கொடுத்ததில், ப்ளூ காய்ச்சல் பரவலை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மக்களுக்கு காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மாநில அரசுகள் மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அறிவுரை
போதிய பெட் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதேபோல் மருத்துவ ஆக்சிஜன் போதிய அளவில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இன்ஃப்ளூயன்ஸா போன்ற காய்ச்சல்கள் மற்றும் சில கடுமையான சுவாச பிரச்சனை பாதிப்புகள் நாடு முழுவதும் உள்ள சில மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். சில மாநிலங்களில் கொரோனா கேஸ்களும் உயர தொடங்கி உள்ளன. அதேபோல் ஓமிக்ரான் கேஸ்கள் சில மாநிலங்களில் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. இந்த கேஸ்களை அரசு நெருக்கமாக கண்காணிக்க வேண்டும்.

முக்கியம்
மாநில அரசுகள் இப்போதும் கொரோனா விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். 5 படிநிலைகளை கொண்ட கொரோனா எதிர்ப்பு முறைகளை கையால் வேண்டும். அதாவது கேஸ்களை கண்டுபிடிப்பது - டெஸ்ட் செய்வது - தனிமை படுத்துவது.. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது - வேக்சின் தருவது உள்ளிட்ட பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் காரணமாக H1N1, H3N2 வகை ப்ளூ காய்ச்சல் கேஸ்கள் பரவி வருகின்றன. காய்ச்ஹசல் பாதிப்பு ஏற்படும் மக்கள் இதனால் வீட்டில் இருக்க வேண்டும். அவர்கள் வெளியே அடிக்கடி செல்ல கூடாது, என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கட்டுப்பாடு
சாதரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது. சிலருக்கு இந்த காய்ச்சல் போனதும் மீண்டும் 2 வாரத்தில் வருகிறது. சிலருக்கு 4 வாரங்கள் கூட இந்த காய்ச்சல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு பலரும் கூட்டம் கூட்டமாக செல்கிறாரக்ள். அதாவது அவ்வளவு எளிதாக இந்த காய்ச்சல் குணமாவது இல்லை. பலரும் இது கொரோனாவாக இருக்குமோ என்று நினைத்துக்கொள்கிறார்கள். இந்த நிலையில்தான் இது கொரோனா இல்லை, இது Influenza A subtype H3N2 வைரஸ் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்து உள்ளது. சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும்.

தவறு
இந்த காய்ச்சல் நீண்ட நாட்கள் ஆகியும் போகவில்லை என்று சிலர் ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்திய மருத்துவ அமைப்பின் கூற்றுப்படி, " இந்த தொற்று பொதுவாக ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். பெரும்பாலும் மூன்று நாட்களுக்குள் காய்ச்சல் மறைந்துவிடும், ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். பெரும்பாலான H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இப்படியான பாதிப்பையே ஏற்படுத்தும்" என்று தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில்தான் ஆன்டிபயாட்டிக்குகளை பயன்படுத்த கூடாது என்று அவர்கள் கூறி உள்ளனர். இதற்கான காரணங்களையும் வெளியிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications