அடேங்கப்பா.. ரூ.30,502 கோடியா! சென்னை - திருச்சி - தூத்துக்குடி இடையே வருது “எக்ஸ்பிரஸ் வே” சாலை

சென்னை - திருச்சி - தூத்துக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் வே சாலை பணிக்காக ரூ.30,502 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரத் மாலா திட்டத்தின் கீழ் சென்னை - திருச்சி - தூத்துக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் வே சாலை பணிக்காக ரூ.30,502 கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. பிரதமரின் கதி ஷக்தி திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் இந்த அதி விரைவு சாலையில் சென்னை - திருச்சி - தஞ்சாவூர் - தூத்துக்குடி இடையிலான சாலை போக்குவரத்து நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார மண்டலங்கள், மத்திய அரசு இந்தியாவின் முக்கிய சாலைகளை அடையாளம் கண்டு அதை எக்ஸ்பிரஸ் வே அதிவிரைவு சாலைகளாக சர்வதேச தரத்தில் மேம்படுத்த கதி சக்தி என்ற வகுக்கப்பட்டது.

குறிப்பாக வணிக போக்குவரத்து அதிகம் நடைபெறும் சாலைகள் இதில் கண்டறியப்பட்டு இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 6,747 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட சாலைகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன.

 ரூ.4.53 லட்சம் கோடி

ரூ.4.53 லட்சம் கோடி

இதன் மூலம் 63 சாலை போக்குவரத்து திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கென ரூ.4.53 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அதில் சென்னை - தூத்துக்குடி நகரங்களை இணைக்கும் வகையில் அதி விரைவு சாலை அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டது. பாரத் மாலா திட்டத்தின் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வகுக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு தற்போது ரூ.30,502 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

 2 வது பசுமை வழிச்சாலை

2 வது பசுமை வழிச்சாலை

சென்னை - திருச்சி - தூத்துக்குடி இடையிலான இந்த சாலை வட தமிழ்நாட்டையும் தென் தமிழ்நாட்டையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலையாக அமைக்கப்படுவதற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தொடரப்பட்ட பணிகள் தொடங்கப்படாத நிலையில் இதில் 2 வது பசுமை வழிச்சாலையாக பார்க்கப்படுகிறது.

4 பாகங்கள்

4 பாகங்கள்

இந்த சென்னை - தூத்துக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் வழி சாலையை 4 ஆக பிரிக்கலாம். அதில் முதலாவது சென்னை - திருச்சி இடையிலான NH 45 என்ற அந்த தேசிய நெடுஞ்சாலை தமிழ்நாட்டில் அதிகளவு வர்த்தக போக்குவரத்து நடைபெறுவதும், தென் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சென்னைக்கு வருவதற்கான முக்கிய வழியாக உள்ளது.

குறுக்கே வரும் தஞ்சாவூர்

குறுக்கே வரும் தஞ்சாவூர்

310 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த சாலை அடுத்து, திருச்சிக்கு அருகே உள்ள டெல்டா மண்டலத்தின் பெரிய மாநகரமான தஞ்சாவூருடன் இணைக்கப்படுகிறது. இது 2 வது பாகமாகும். அதை தொடர்ந்து தஞ்சாவூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி வரை 82 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இது 3 வது பாகம். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்டன.

பிள்ளையார்பட்டி - தூத்துக்குடி

பிள்ளையார்பட்டி - தூத்துக்குடி


பிள்ளையார்பட்டியில் இருந்து மதுரை மேலூர் அருகே NH 45B என்ற தேசிய நெடுஞ்சாலையுடன் அந்த சாலை இணைகிறது. பிள்ளையார்பட்டியில் இருந்து தூத்துக்குடி வரை 160 கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கப்பட உள்ளது. இது இந்த சாலையின் 4 வது பாகமாகும். இதன் மூலம் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் குறைந்த நேரத்தில் சென்னைக்கு செல்வதுடன், சென்னை துறைமுகம் - தூத்துக்குடி துறைமுகம் இடையிலான சாலை போக்குவரத்து பயண தூரமும் குறையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+