இயற்கைக்கு மாறான உறவு.. ஐபிசி 377வது பிரிவு நீக்கம்.. மத்திய அரசு அதிரடி மாற்றம்! கவனிச்சீங்களா
டெல்லி: இந்தியாவில் நீண்டகாலமாக நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் மாற்றம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்டு சட்டமசோதாவை அறிமுகம் செய்துள்ள நிலையில் அதன்படி 377 என்ற பிரிவு நீக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் ஆண்களுக்கு பெரிய சிக்கல் உருவாகலாம் என கூறப்படுகிறது.
இந்தியாவில் குற்றம் செய்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தில் (IPC) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPc), இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே இந்த சட்டங்கள்அமலில் உள்ளன. அவ்வப்போது மட்டும் சின்ன திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் தான் இந்த 3 சட்டங்களுக்கு மாற்றாக புதிய விதிமுறைகளுடன் வேறு பெயரில் சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தார்.
அதன்படி பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய நாய சன்ஹிதா மசோதா, பாரதிய சக்ஷவா மசோதா உள்ளிட்ட 3 சட்ட திருத்த மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்தார். இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேலும் முந்தைய 3 சட்டங்களில் இந்திய என்ற பெயர் இருந்த நிலையில் தற்போதைய பெயரில் பாரதிய என்ற பெயர் இருக்கிறது. அதோடு தற்போதைய பெயர் அனைத்தும் ஹிந்தியில் இருக்கிறது. இதனால் இந்த பெயர் மாற்றம் மற்றும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கு தற்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளன. மேலும் இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்? என்பது பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது முதலில் ஐபிசி 377 என்பது இந்தியாவில் பாலியல் உறவுகளை வரையறுக்கும் சட்டமாகும். இந்த சட்டப்பிரிவு என்பது இயற்கைக்கு மாறான உறவு கொள்வதை விவரிக்கிறது. அதாவது ஓரினச்சேர்க்கை, மனித-மிருக உறவு உள்ளிட்டவை இந்த சட்டத்தின் கீழ் இயற்கைக்கு மாறான உறவாக கருதப்படகிறது. அதன்படி பார்த்தால் ஆண்-ஆண், பெண்-பெண் உறவான ''ஹோமோசெக்சுவல் (homosexual)' முறையை தவறானது என இந்த சட்டப்பிரிவு வரையறை செய்கிறது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கடந்த 2018 ல் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் ‛‛வயது வந்தோர் விருப்பத்துடன் தன்பாலின உறவு வைப்பது குற்றமாகாது'' என உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் 377 என்ற பிரிவின் கீழ் குழந்தைகள், விலங்குகளுக்கு எதிரான உறவு என்பது குற்றமாக கருதப்படும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்மூலம் 377 என்ற சட்டப்பிரிவு என்பது சிறுவர்களை மிரட்டி பாலியல் உறவு வைக்கும் ஆண்களுக்கு எதிரானதாக இருந்தது. இந்த சட்டப்பிரிவில் குற்றம் சாட்டப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை, 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் வசூலிக்கவும் வழிவகை செய்கிறது.
ஆனால் தற்போது அறிமுகம் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாவின் அடிப்படையில் பார்த்தால் 377 என்ற பிரிவு முந்தைய நடைமுறையில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண் குழந்தைகளுக்கு எதிரான தன்பாலின வழக்கு பிரிவு நீக்கம் செய்வது போல் உள்ளது. மேலும் பெண் அல்லது குழந்தைகளுக்கு எதிராக ஆண் செய்யும் பாலியல் குற்றம் என பொதுவான வரையறையை வழங்குகிறது. இதனால் இந்த புதிய சட்டம் என்பது விவாதத்தை கிளப்பி உள்ளது. அதேவேளையில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்றால் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications