வக்பு சொத்தை பதிவு செய்ய புதிய இணையதளம்.. ஜூன் 6ம் தேதி அமலுக்கு கொண்டு வரும் மத்திய அரசு!
டெல்லி: நாடு முழுவதும் வக்ஃப் சொத்துகளை வெளிப்படைத்தன்மையுடன் மேலாண்மை செய்ய வசதியாக ‛உமீத்' எனும் போர்ட்டலை மத்திய அரசு ஜூன் 6ம் தேதி தொடங்க உள்ளது.
நாடு முழுவதும் வக்ஃப் சொத்துகளை வெளிப்படைத்தன்மையுடன் மேலாண்மை செய்ய வசதியாக புதிய இணையதளத்தை மத்திய அரசு ஜூன் 6ம் தேதி தொடங்க உள்ளது. இந்த இணையதளம் என்பது ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாடு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி இந்த இணையதளம் நாடு முழுவதும் செயல்பட உள்ளது.

அதன்படி அனைத்து வக்ஃப் சொத்துகளும் அடுத்த 6 மாதங்களுக்குள் போர்ட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும். சொத்துகளின் நீளம், அகலம் உள்ளிட்ட பிற விபரங்களுடன் சொத்து விவரம் பதிவு செய்யப்பட உள்ளது.
இதற்கான பதிவுகளை அந்தந்த மாநில வக்ஃப் வாரியங்கள் எளிதாக்கும். தொழில்நுட்ப அல்லது பிற குறிப்பிடத்தக்க காரணங்களால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பதிவு செய்யப்படாத சொத்துக்களுக்கு ஒன்று முதல் இரண்டு மாதங்கள் வரை நீட்டிப்பு வழங்கப்படலாம்.
மேலும் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு மேல் பதிவு செய்யப்படாத சொத்துக்குள் சர்ச்சைக்குரியதாக எடுத்து கொள்ளப்படும். அதன்பிறகு அந்த சொத்துகள் தீர்வுக்காக வக்ஃப் தீர்ப்பாயத்திற்கு அனுப்பப்படும்.
மத்திய அரசு சமீபத்தில் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்ற 2 சபைகளிலும் நிறைவேற்றியது. ஜனாதிபதி திரெளபதி முர்முவும் ஒப்புதல் அடிப்படையில் இந்த போர்ட்டல் தொடங்கப்பட உள்ளது. வக்ஃபு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறவில்லை. இதனால் வழக்குகளை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் வைத்துள்ளளது.
மேலும் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் சில அம்சங்களை தற்போது செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்தது. இதையடுத்து வக்ஃபு சட்டத்திருத்தத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இந்நிலையில் தான் புதிதாக மத்திய அரசு ‛உமீத்' போர்ட்டலை தொடங்குவதாக அறிவித்துள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications