ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த என்சிபி அதிகாரி மாற்றம்! மத்திய அரசு திடீர் உத்தரவு.. என்ன காரணம்?
டெல்லி: ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்து வந்த தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் மாற்றப்பட்டுள்ளார். என்சிபி அதிகாரி ஞானேஸ்வர் சிங் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படுவதாகச் சிலர் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அவரை மத்திய உள் துறை அமைச்சகம் இப்போது திரும்பப் பெற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

சுமார் 2000 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தப்பட்டதாகச் சொல்லி ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கைத் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது. என்சிபி துணை இயக்குநரான ஞானேஸ்வர் சிங் இந்த வழக்கை விசாரித்து வந்தார். இருப்பினும், அவர் ஜாபர் சாதிக் விவகாரத்தில் தமிழக போலீசாரை தொடர்புப்படுத்தி பேசியிருந்தார். பல்வேறு பேட்டிகளில் இது தொடர்பான கருத்துகளைக் கூறி வந்தார்.
இதனால் ஜாபர் சாதிக் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்தோடு செயல்பட்டதாக ஞானேஸ்வர் சிங் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், ஜாபர் சாதிக் கைதின் போது பல்வேறு விதிமீறல்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் தான் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குநராக ஞானேஸ்வர் சிங்கை மத்திய அரசு வாபஸ் பெற்று இருக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி ஞானேஸ்வர் சிங் வாபஸ் பெறப்பட்டுள்ளார்.
ஜாபர் சாதிக் உள்ளிட்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வழக்குகள் மற்றும் என்சிபி துணை இயக்குநர் பதவியில் இருந்தும் ஞானேஸ்வர் சிங் திரும்பப் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேநேரம் எதற்காக இந்த மாற்றம் என்பது குறித்த தகவல்கள் மத்திய அரசின் செய்திக்குறிப்பில் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு இருந்தார். அந்த வழக்கை விசாரித்த என்சிபி குழுவிலும் இந்த ஞானேஸ்வர் சிங் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications