ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு- மாநில அரசுகளுக்கு அதிகாரமே இல்லை- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!
டெல்லி: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசு உள்ளிட்ட எந்த ஒரு அமைப்புக்குமே அதிகாரம் கிடையாது; மத்திய அரசு மட்டுமே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் கொண்டது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு விடுதலை அடைவதற்கு முன்பாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில்தான் இன்றும் இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. நாடு விடுதலை அடைந்த காலம் முதலே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்பது தமிழ்நாட்டின் பிரதான கோரிக்கை.

இதனிடையே பீகார் மாநிலத்தில் ஆளும் ஜேடியூ -ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ளது. பீகார் அரசின் இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக பீகாரின் பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் பாட்னா உயர்நீதிமன்றமோ, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என அனுமதித்தது.
பாட்னா உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக 'ஏக் சோச் ஏக் பிரயாஸ் என்ற தன்னார்வ அமைப்பு உள்ளிட்டவை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளன. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
இதனிடையே இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்திம் மத்திய அரசு இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய அரசாங்கத்தைத் தவிர வேறு எந்த ஒரு அமைப்புக்குமே ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த எந்த அதிகாரமும் இல்லை. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட/ பிற்படுத்தப்பட்ட/ பழங்குடி மக்களுக்கான உரிமைகளை வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் இந்த பிரமாணப் பத்திரம் குறித்து பாஜக எம்பி சுஷில் குமார் மோடி கூறுகையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி மத்திய அரசு மட்டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியும். இதர அமைப்புகள் ஆய்வுகள் நடத்தலாம். விவரங்களை சேகரிக்கலாம். இந்த ஆய்வுகளும் தரவுகளும் விவரங்களுமே மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பதாகிவிடாது. பாட்னா உயர்நீதிமன்றமும் கூட இதையேதான் சொல்லி இருக்கிறது. பீகாரில் என்ன நிலைப்பாடு எடுக்கப்பட்டதே அதையே உச்சநீதிமன்றத்தில் பாஜக தெரிவித்துள்ளது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார்.
மத்திய அரசின் பிரமாணப் பத்திரம் தொடர்பாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: மத்திய அரசுக்கு எந்த ஒரு புரிதலுமே இல்லை. எப்படி உண்மையை ஒடுக்கலாம், மறைக்கலாம் என்பது மட்டுமே மத்திய அரசு தெரிந்து வைத்திருக்கிறது. மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பாஜக எதிர்க்கிறது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிராகத்தான் பாஜக இருக்கிறது என்பதையே இது வெளிப்படுத்தி இருக்கிறது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை ஆதரிப்பதாக இருந்தால் நாடு முழுவதும் நடத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு உத்தரவிடட்டும். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications