அடுத்த பஞ்சாயத்தை கூட்டும் மத்திய பாஜக அரசு.. வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்கும் மசோதா தாக்கல்?
டெல்லி: இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார பணிகளுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மத்திய வக்பு வாரியம் மற்றும் மாநிலங்களின் வக்பு வாரியங்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்தும் ஷரத்தும் புதிய மசோதாவில் இடம் பெறும் என்கின்றன மத்திய அரசு வட்டாரங்கள்.
இஸ்லாமியர்களின் சமூக, பொருளாதார நலன்கள், சொத்துகளை பராமரிக்கக் கூடிய அமைப்பாக இருப்பது வக்பு வாரியம். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 2013-ம் ஆண்டு வக்பு வாரியத்துக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இதற்காக 1995-ம் ஆண்டு வக்பு வாரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

டெல்லியில் 123 சொத்துகளுக்கு வக்பு வாரியம் உரிமை கோரிய விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதனையடுத்தே வக்பு வாரியத்தின் அதிகாரத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம்.
நாடு முழுவதும் தற்போது வக்பு வாரியத்துக்கு சொந்தமாக 8.7 லட்சம் சொத்துகள் இருப்பதாகவும் இது 9.4 லட்சம் ஏக்கர் எனவும் கூறப்படுகிறது. வக்பு வாரியம் தற்போது நடைமுறையில் சொத்துகளுக்கு உரிமை கோருவது எளிதான ஒன்றாக இருக்கிறது; இந்த நடைமுறையை மாற்றுவது உள்ளிட்ட மொத்த 40-க்கும் மேற்பட்ட திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடி செய்துள்ளதாம். அதாவது வக்பு வாரியம் இனி தன்னிச்சையாக எந்த ஒரு சொத்துக்கும் உரிமை கோர முடியாது; இதற்கென தனியாக ஒரு நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட இருக்கிறதாம்.
மத்திய மற்றும் மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அதிகப்படுத்துவதற்கும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறதாம். இது தொடர்பாக மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பதாகவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய மசோதா அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் வக்பு வாரியத்தின் அதிகாரங்களை திருத்தும் மசோதா மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications