கோவா பழங்குடிகளுக்கு தனி சட்டசபை தொகுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் புதிய மசோதா நாளை தாக்கல்!
டெல்லி: கோவா மாநிலத்தில் பழங்குடிகளுக்கு தனி சட்டசபை தொகுதிகளை உருவாக்குவது தொடர்பான மத்திய அரசின் புதிய மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், கோவா மாநில சட்டசபை தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்க வகை செய்யும் மசோதாவை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
கோவா மாநிலத்தில் 2011 கணக்கெடுப்பின் அடிப்படையில் மொத்த மக்கள் தொகை 14.58 லட்சம். இதில் தலித்துகள் (எஸ்சி SC) 25,449 பேர். பழங்குடிகள் எண்ணிக்கை 1,49,275. கோவாவின் பெர்னெம் சட்டசபை தொகுதி தனித் தொகுதியாக தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பழங்குடிகளுக்கான சட்டசபை தொகுதி எதுவும் இல்லை.

லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கோவா சட்டசபையில் பழங்குடிகளுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க தனி சட்டசபை தொகுதியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை விஸ்வரூபம் எடுத்தது. தங்களுக்கு தனி சட்டசபை தொகுதியை உருவாக்காவிட்டால் லோக்சபா தேர்தலையே புறக்கணிப்போம் என்றும் பழங்குடிகள் எச்சரித்திருந்தனர்.
இதனால் கடந்த மார்ச் மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கோவா மாநில சட்டசபை தொகுதிகளில் பட்டியல் பழங்குடியினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைக்க வகை செய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது. மத்திய அரசின் மசோதாவில், கோவா மாநிலத்தில் உள்ள பழங்குடியினரின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, 2008-ம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதி மறுவரையறை ஆணையில் திருத்தங்கள் செய்வதற்கும், கோவா மாநிலத்தின் சட்டசபையில் உள்ள இடங்களை மாநிலத்தின் பட்டியலில் உள்ள பழங்குடியினருக்கு மறுசீரமைப்பு செய்வதற்கும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு சட்டம் இயற்றுவது இன்றியமையாததாகும். கோவா சட்டசபை தொகுதிகளை மறுசீரமைப்பதன் மூலம் கோவா சட்டசபையில் பட்டியல் பழங்குடியினருக்கு முறையான பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கத்திற்காக நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை, 2008 இல் தேவையான திருத்தங்களைச் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு இது அதிகாரம் அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, கோவாவில் 3 ஜாதிகளை பழங்குடிகள் பட்டியலில் சேர்த்து தனி சட்டசபை தொகுதியை உருவாக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications