நாடு முழுவதும் சுங்க கட்டணம் 40% குறைக்கப்படுகிறது.. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதிரடி அறிவிப்பு
டெல்லி: நாடு முழுவதும் சுங்க கட்டணம் 40% குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளதாக என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுங்க் சாவடி கட்டணங்களுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் சுங்க சாவடிகளை அகற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மட்டும் 50 சுங்க சாவடிகள் உள்ளன. இந்த சுங்க சாவடிகளில் 2 கட்டங்களாக கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரூ5 முதல் ரூ150 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.

லோக்சபாவில் திருமா கேள்வி
சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலும் வலியுறுத்தி வருகின்றனர். லோக்சபாவில் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி, 60 கி.மீ-க்கு ஒரு சுங்க சாவடிதான் இருக்கும்.. எஞ்சியவை அகற்றப்படும் என அமைச்சர் கட்காரி கூறினாரே.. அப்படி அகற்றப்பட்டதா? என கேல்வி எழுப்பி இருந்தார்.

ராஜ்யசபாவில் வில்சன் கேள்வி
மேலும் சுங்க சாவடிகளை முழுமையாக அகற்றுவது தொடர்பாக ராஜ்யசபாவில் திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பி இருந்தார். அத்துடன் வாகன பதிவின் போதே சுங்க கட்டணமாக ஒரு சிறிய கட்டணத்தை வசூல் செய்யலாம் என்பதும் வில்சன் எம்.பி.யின் யோசனை. இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

பதிலனுப்பிய கட்காரி
இது தொடர்பாக திமுக எம்.பி. வில்சன் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக வாகனப்பதிவின் பொழுதே ஒரு முறை சிரிய கட்டணமாக வசூலிக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு
@nitin_gadkari அவர்களிடம் பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்.

கட்காரியின் அதிரடி அறிவிப்பு
அதற்கு பதில் அளித்துள்ள மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மாண்புமிகு அமைச்சர் அவரக்ளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறைக் சிரியா கட்டணமாக வசூலித்துக்கொள்ள ஆவண செய்யுமாறு மாண்புமிகு அமைச்சர் @nitin_gadkari அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வில்சன் எம்.பி. கூறியுள்ளார்.
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications