இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ்- அவசர கூட்டத்துக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துவிட்டது.

ஆனால் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து இங்கிலாந்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே இங்கிலாந்தின் புதிய கொரோனா வைரஸ் தொடர்பாக விவாதிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமையன்று அவசர ஆலோசனை கூட்டத்துக்க் அழைப்பு விடுத்துள்ளது. சுகாதர அமைச்சகத்தின் கூட்டு கண்காணிப்பு குழு இந்த கூட்டத்தை நடத்துகிறது.
உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.












Click it and Unblock the Notifications