டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எய்ம்ஸில் அமித் ஷா அனுமதி.. முழு உடல் பரிசோதனை.. மருத்துவமனை விளக்கம்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரொனா காரணமாக பாதிக்கப்பட்டார். அதன்பின் ஆகஸ்ட் 14 ஆம் தேதி குணம் அடைந்தார். பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Union minister amit shah admitted in aims again

அதன்பின் மீண்டும் கொரோனாவிற்கு பின்பான சிகிச்சை பெற அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 18 நாட்கள் கொரோனாவிற்கு பின்பான சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆகஸ்ட் 18ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கொரோனா வேக்சின் வரும் வரை.. மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுரை!கொரோனா வேக்சின் வரும் வரை.. மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.. பிரதமர் மோடி அறிவுரை!

தற்போது மீண்டும் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவமனை மருத்துவர் குழு தற்போது தொடர்ந்து அமித் ஷாவின் உடலை பரிசோதித்தும், கண்காணித்தும் வருகின்றனர்.

கொரோனாவிற்கு பின்பான உடல் பரிசோதனைக்காக இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். முழு உடல் பரிசோதனைக்காக இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

English summary
Union minister amit shah admitted in aims again
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X