கொரோனா போராளிகளை அவமதிப்பதா? வாபஸ் வாங்குங்க.. ராம்தேவுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துகளை உடனே திருமப் பெற வேண்டும் என்று பாபா ராம்தேவுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவுறுத்தியுள்ளார்.

யோகா குரு என அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ், கொரோனா சிகிச்சை தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அலோபதி எனப்படும் நவீன அறிவியல் மருத்துவமே முட்டாள்தனமானது என வசைபாடி இருந்தார்.

Union Minister Harsh Vardhan asks Ramdev to withdraw objectionable remarks against Allopathy

இதற்கு இந்திய மருத்துவர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அத்துடன் பாபா ராம்தேவை, தொற்று நோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கவும் வலியுறுத்தியது இந்திய மருத்துவர் சங்கம்.

இதனால் ராம்தேவின் பதஞ்சலி அறக்கட்டளை ஒரு விளக்க அறிக்கை வெளியிட்டது. அதில், ராம்தேவின் கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. நவீன அறிவியல் மருத்துவத்துக்கு எதிராக ராம்தேவ் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தமது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் மருத்துவர்களை போராளிகளை அவமதிக்கும் வகையில் ராம்தேவ் கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர்தமது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+