வரும் செப்டம்பர் 11ஆம் தேதி முதுநிலை நீட் தேர்வு... மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலமே நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தாண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டரில், "முதுநிலை நீட் தேர்வை வரும் செப்டம்பர் 11ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளோம். இளம் மருத்துவ ஆர்வலர்களுக்கு வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
We have decided to conduct #NEET Postgraduate exam on 11th September, 2021.
— Mansukh Mandaviya (@mansukhmandviya) July 13, 2021
My best wishes to young medical aspirants!
இளநிலை நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் மாலை 5 மணி முதல் neet.nta.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications